எப்பா என்ன வெயில்! ஊட்டி சென்று உற்சாகமாக குத்தாட்டம்.. அசர வைத்த அணைக்கட்டு திமுக எம்எல்ஏ ஆட்டம்
ஊட்டி: லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு ஊட்டி சென்று உற்சாகமாக குத்தாட்டம் போட்டிருக்கிறார் அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ. A.P.நந்தகுமார்.. எம்எல்ஏ நண்பர்களுடன் நடனம் ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
17வது லோக்சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து லோக்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி அன்று தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒரு பகுதி, உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒரு பகுதி, மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது அமைதியாக நடந்து முடிந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
அடுத்ததாக கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) என 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரண மடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. எனவே மீதமுள்ள 88 தொகுதிகளிலும் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.
இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தலுக்காக வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் பலர், தேர்தல் முடிந்த கையோடு கோடைவாசல் தலங்களில் சென்று ஓய்வெடுத்து வருகிறார்கள். பல வேட்பாளர்கள் மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் ஊட்டி, கொடைக்கானலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
என்னதான் ஏசி கார், ஏசி வீடு என்று வாழ்ந்தாலும், வெயிலின் தாக்கம் பலரையும் புரட்டி போட்டுள்ளது. எப்படியாவது தப்பித்து சில நாட்களாவது இயற்கையும் பசுமையையும் பார்த்துவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வெயிலில் இருந்து தப்பித்து, கடும் குளிரில் காலையில் காபி குடிக்க ஆசைப்படுகிறார்கள்.. வெயிலில் நடந்தாலும் அந்த வெயில் அவர்கள் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இயற்கை அன்னையின் காலடியில் சரண் அடையவே பலரும் விரும்புகிறார்கள்.
இதன் காரணமாக ஊட்டியும், கொடைக்கானலும் சென்னை ஓஎம்ஆர் சாலை போல் மாறிக்கிடக்கின்றன. மூச்சுவிட முடியாத அளவிற்கு வாகனங்கள் முந்திக்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டிலேயே குறைவான வெப்பம் உள்ள பகுதிகள் என்றால் அது ஊட்டியும், கொடைக்கானலும் தான்.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது குடும்பத்துடன் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் தங்கி சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வரிசையில், தமிழக பாஜக தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வந்தார். அவர் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
இதேபோல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு வந்தனர். அவர்கள் கொடைக்கானலில் தங்கி சுற்றி பார்த்தும், குளுகுளு காலநிலையை அனுபவித்தும் மகிழ்ந்தும் வருகிறார்கள். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி(திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் ஏப். 29 முதல் மே 4 வரை ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு ஊட்டி சென்று உற்சாகமாக குத்தாட்டம் போட்டிருக்கிறார் அணைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ. A.P.நந்தகுமார்.. எம்எல்ஏ நண்பர்களுடன் நடனம் ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. A.P.நந்தகுமார் எம்எல்ஏ மலையின் உச்சியில் நண்பர்களுடன் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடியும், விசில் அடித்தும் உற்சாகமாக இருக்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications