நீலகிரியில் 844 சொகுசு விடுதிகளை மூட உத்தரவு.. பல விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு .. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 920 சட்டவிரோத தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அதில் 844 சட்டவிரோத விடுதிகளை இழுத்து மூட இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 76 விடுதிகள் இழுத்து மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விடுதிகளின் கட்டிட உரிமை, கட்டிடத்தின் வகை உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்து வருகிறோம் என தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

வனம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த நீதிபதிகள் முன்பு நடந்த விசாரணையின்போது, ஊட்டி, கொடைக்கானலில் சட்டவிரோதமாக தங்கும் விடுதிகள் செயல்படுவதாக கூறப்பட்டது.

Nilgiris resorts

இதையடுத்து இந்த சட்டவிரோத தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து இழுத்து மூட மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களையும் கண்டறிந்து அவற்றிற்குச் சீல் வைக்க அல்லது இடிக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் வணிக ரீதியான விடுதிகள் இயங்குவதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது.

விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை 'வரன்முறைப்படுத்துகிறோம்' என்ற பெயரில் அங்கீகரிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால்தான், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கட்டிடங்கள் மீது இப்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 920 சட்டவிரோத தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அதில் 844 சட்டவிரோத விடுதிகளை இழுத்து மூட இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

76 விடுதிகளை இழுத்து மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விடுதிகளின் கட்டிட உரிமை, கட்டிடத்தின் வகை உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்து வருகிறோம். இழுத்து மூடி 'சீல்' வைக்கப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்கள் அதை எதிர்த்து அரசிடம் மேல்முறையீடு செய்து, அந்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

920 சட்டவிரோத விடுதிகளை உள்ளூரைச் சேர்ந்த 521 பேரும், நீலகிரி மாவட்டம் அல்லாத வெளியூரைச் சேர்ந்த 399 பேரும் நடத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் சட்டத்தை தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, மின்சாரத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டி, சட்டவிரோத தங்கும் விடுதிகள் செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+