ஊட்டி சுற்றுலா செல்வோருக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி.. 100 ரூபாய் இருந்தால் போதும்.. மெகா அறிவிப்பு
ஊட்டி: ஊட்டிச்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் கண்டுகளிக்க 100 ரூபாயில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் கட்டணம் கட்டிவிட்டு சிறப்பு பேருந்தில் ஏறினால் ஊட்டியில் பல்வேறு இடங்களை கண்டு ரசிக்கலாம்.
கோடை வெயில் வழக்கத்தைவிட மிக கடுமையாக இருப்பதால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள். பலர் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர்பிரதேசங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்குமே மழை இல்லாத காரணத்தால், பெரிய அளவில் குளுகுளு சீதோஷண நிலை இல்லை.

சமவெளி பகுதிகளை ஒப்பிடும் போது, ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நிலைமை பரவாயில்லை.. பகலில் ஓரளவு வெயிலும், மாலை மற்றும் இரவில் குளிர் அடிப்பதால் ஊட்டி, கொடைக்கானலுக்கு பலர் குடும்பத்துடன் சென்று தங்கி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் அதிக அளவில் செல்ல ஆர்வம் காட்டுவதால், பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு..கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் கண்டு களிக்க சுற்று பேருந்து இயக்கப்படுகிறது.
மேலும், கோவை புதிய பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.
இதுதவிர கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், குறைந்த கட்டணத்திலும் கண்டு களிக்க சுற்று பேருந்துகள் ஊட்டியில் இயக்கப்படுகிறது. ஊட்டி மத்திய பேருந்து நிலையம், தண்டர் வேர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டி மியூசியம், ரோஜா பூங்கா போன்ற வழித்தடங்களில் சுற்று பேருந்துகள் செல்லும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரியவர்களுக்கு 100 ரூபாய் மற்றும் சிறியவர்களுக்கு 50 ரூபாய் என கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெற்று சுற்று பேருந்துகளில் பயணிக்கலாம்.
விரும்பிய சுற்றுலா தலங்களில் இறங்கி, விரும்பிய நேரம் வரை சுற்றிப் பார்க்கலாம். பின்னர் வேறு ஒரு சுற்றுப்பேருந்தில் ஏறி கட்டணமின்றி பயணிக்கலாம். ஒரு நாள் முழுவதும் இந்த அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பேருந்துகளில் பயணித்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்" என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications