Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றுலா போக பிளான் பண்றீங்களா? ஊட்டி கொடைக்கானலுக்கு கையில் நிறைய பணத்தை கொண்டு போகாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா போக பிளான் பண்றீங்க அப்படீன்னா.. கையில் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு போகாதீங்க? குறிப்பாக 50000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கையில் பணத்தை எடுத்துக்கொண்டு போகாதீர்கள்.. அப்படி போனால் உங்கள் பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து வரிசையாக விடுமுறைவிடப்பட்டு வருகிறது. பலரும் கோடை விடுமுறை குடும்பத்துடன் கொண்டாட, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு, வாகமன், கூர்க் என வெயிலுக்கு இதமான சுற்றுலா தளங்களை நோக்கி பயணிக்க விரும்புகிறார்கள். சுற்றுலா செல்லும் பலரும் கையில் ரொக்கமாக ஏராளமான பணத்தை எடுத்து செல்வார்கள்.. ஏனெனில் மலைப்பகுதியில் சுற்றுலா தலங்களில் செல்லும் போது ஏடிஎம்கள் வேலை செய்வது இல்லை.. அதிகப்படியான மக்கள் திடீரென குறிப்பிட்ட நகருக்கு செல்லும் போது, அங்கு ஏடிஎம்களில் வேகமாக பணம் தீர்ந்துவிடும். அத்துடன் உடனே இயல்பு நிலைக்கு திரும்பாது.. அந்த வகையில் தான் சுற்றுலாதலங்களில் ஏடிஎம்கள் வேலை செய்யாமல் போகும் வாய்ப்பு அதிகமாகவேஇருக்கிறதுழ. இப்படியான சூழலில் 50000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சுற்றுலா பயணிகளை நிச்சயம் பாதிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Are you planning to go on a trip Don t carry a lot of cash in ooty and kodaikanal

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது.

பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

ஊட்டியில் சுற்றுலாப் பயணியிடம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை.. கண்ணீர் விட்டு அழுத பஞ்சாபி பெண்


மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது..

அதேநேரம் இந்த பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்றால், 50000க்கு கீழ் வருமாறு பணத்தை கையில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் குறைய குறைய எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஓட்டல் வாடகை, சாப்பாடு போன்றவற்றிற்கு ஏற்கனவே பணம் கட்டி முன்பதிவு செய்ய முடியும். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.. எந்த பிரச்சனையும் வராது.. இன்றைய சூழலில் கூகுள் பே இல்லாத ஊரே இல்லை.. குறிப்பாக தமிழ்நாட்டில் கூகுள்பே அல்லது பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்த முடியும்.. எனவே டிஜிட்டலில் பணம் செலுத்துங்கள்... ஏப்ரல் 19ம் தேதி வரை இந்த சிக்கல் கண்டிப்பாக இருக்கும். அதன்பிறகு இந்த பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+