சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கிளீன் ஸ்வைப்".. அமித்ஷாவின் "சாதி" கணக்கு.. நழுவவிடும் அதிமுக.. திமுக ரெடி.. சொல்றது யார் பாருங்க

அமித்ஷா தெரிவித்த 2 பாயிண்ட்கள் குறித்து அலசல்கள் நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக அமித்ஷா சொல்லியிருந்த நிலையில், அதிமுகவில்தான் அத்தகைய வெற்றிடம் உள்ளது, அதற்கு காரணம் அதிமுகவேதான் என்று மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் கருத்து தெரிவித்துள்ளார்.

அமித்ஷா சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, சில முக்கிய விஷயங்களை பாஜக நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் 2 மேஜர் பாயிண்ட்டுகளை அமித்ஷா சொன்னாராம்.. முதலாவதாக, கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிந்தைய அரசியலில், ஒரு பெரிய வெற்றிடம் தமிழகத்தில் உருவாகி உள்ளது..

என்னது குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிடுதா? தேர்தலுக்கு பின் நிலைமை தெரியும்: அமித்ஷா நம்பிக்கைஎன்னது குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிடுதா? தேர்தலுக்கு பின் நிலைமை தெரியும்: அமித்ஷா நம்பிக்கை

 2 பாயிண்ட்கள்

2 பாயிண்ட்கள்

பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம்... பாஜக அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினாராம். இரண்டாவதாக, திமுக குடும்ப அரசியலில் அழிந்து கொண்டிருக்கிறது.. அதிமுக, தானாகவே சிதைந்து கொண்டிருக்கிறது, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, நாம் வெற்றியை வென்றெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் அமித்ஷா பேசினாராம். அமித்ஷாவின் இந்த பேச்சு குறித்து, பல்வேறு அலசல்களும், விவாதங்களும் எழுந்தபடியே உள்ளன. அந்தவகையில், பிரபல சேனல் ஒன்றிற்கு, அரசியல் ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனின்பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், அமித்ஷா சொன்ன வெற்றிடம் எது என்பதை விளக்கமாக சொல்லி உள்ளார்.

வெற்றிடம்

வெற்றிடம்

அதன் சுருக்கம்தான்: "வெற்றிடம் உள்ளதாக அமித்ஷா சொன்னாராம்.. 2019- தேர்தலுக்கு முன்பு இப்படித்தான் வெற்றிடம் என்று டெல்லியில் இருந்து கிளம்பி வந்தார்கள்.. இப்போதும் அதையே சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.. இங்கே அவர்கள் தமிழகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்றால், அதிமுக பலவீனமாக இருப்பதை பயன்படுத்தி இங்கே வந்துவிடலாம் என நினைக்கிறார்கள்.. ஒரு இயக்கம் எங்கே பலவீனம் அடைகிறதோ, அந்த இடத்தை பாஜக எட்டிப்பிடித்துவிடும் , அல்லது அந்த இடத்தை பலவீனப்படுத்தும்.. இதில் ஏதாவது ஒன்றை செய்வார்கள்..

கலைஞர்

கலைஞர்

காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் என்றுதான் ஆரம்பத்திலேயே பாஜகவில் சொன்னார்கள்.. அவர்கள் நினைத்த மாதிரி தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை.. ஜெயலலிதா இறந்துவிட்டார், கலைஞரும் இறந்துவிட்டார், உள்ளே நுழைந்துவிடலாம் என்று கணக்கு போட்டார்கள். அவர்கள் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.. காரணம், இரு தலைவர்களும் இல்லை என்றாலும், இங்கே அமைப்பு என்பது பலமாக இருக்கிறது.. குறிப்பாக, திமுகவின் அமைப்பு தலைமை முதல் கடைகோடி வரை தெளிவாக இருக்கிறது..

கருணாநிதி

கருணாநிதி

கலைஞருக்காவது, அண்ணாவுக்கு பிறகு தலைவராகும்போது, சின்ன சின்ன அளவிலான நெருக்கடிகள், போட்டிகள் இருந்தது.. ஆனால், இப்போது ஸ்டாலினுக்கு அதுவும் கிடையாது.. நேரடியாகவே அவர்தான் என்பது கிளியர் ஆகிவிட்டது.. தோழமைக்கட்சிகளும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கும் சென்றுவிட்டன.. அதனால்தான், எதை கையில் எடுப்பது என்று பாஜக யோசிக்கும்போது, ஜெயலலிதா இல்லாமல், ஆட்சியில் இருந்த அதிமுகவை ஆட்டுவிக்க கூடிய சூழலை கையில் எடுத்துவிட்டார்கள்.. அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் - எடப்பாடி என்று பொம்மலாட்டம் போல, கையில் நூலை பிடித்து மாற்றி ஆட்டம் காட்டி வருகிறது பாஜக.

 கலைஞர் + சாதி

கலைஞர் + சாதி

அதிமுகவை பலவீனப்படுத்திவிட்டு, உள்ளே வரலாம் என்பதே அதன் கணக்கு.. தமிழ்நாட்டில் அதுக்கான வாய்ப்பு இதுவரை வரவில்லை.. அதிமுகவின் தோளில் சவாரிசெய்யக்கூடிய அளவுக்குதான் அவர்கள் இருக்கிறார்கள்.. அதேபோல, அதிமுக வாக்காளர்கள் தங்களுக்கு கிடைத்துவிடுவார்கள் என்றும் கணக்கு போடுகிறார்கள்.. அதிமுக வாக்காளர்கள் என்றால், அதிமுக ஆதரவாளர்கள் கிடையாது.. திமுகவின் எதிர்பார்ப்பாளர்கள், இன்னும் சொல்லப்போனால் கலைஞரின் எதிர்ப்பாளர்கள் என்று அர்த்தம்.. எனவே, கலைஞரை சாதி ரீதியாக எதிர்க்கக்கூடியவர்களையும் தங்கள் பக்கம் திருப்ப நினைக்கிறது பாஜக.

 மோடி டாடி

மோடி டாடி

மேலும், மோடியை டாடி என்று சொல்லும் அதிமுககாரர்களையும் தங்கள் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.. இந்த விஷயத்தில்தான் அமித்ஷாவின் கவனம் குவிந்துள்ளது.. அமித்ஷா சொல்லும் வெற்றிடம் தமிழகத்தில் கிடையாது, ஆனால், அதிமுகவில் உள்ளது.. அதிமுக தலைமையில் ஏற்படக்கூடிய போட்டிகள், பிணக்குகள், சர்ச்சைகள் இவைகளை தங்களுக்கான வெற்றிடமாக பார்க்கிறார்கள்.. சுருக்கமாக சொன்னால், கழுத்தை அழுத்தி, காலை ஊன்றிவிடலாமா என்று நினைக்கிறார்கள்..

 எடப்பாடி ஸ்டிரைக்

எடப்பாடி ஸ்டிரைக்

இன்று மிக முக்கிய பொறுப்பில், தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுகதான்.. ஆனால் அவர்கள் பங்களிப்பு என்ன? சட்டமன்றத்தில் எடப்பாடி பக்கத்தில் ஓபிஎஸ்ஸை உட்கார வைத்துவிட்டார்களாம்.. இதுக்கு ஒரு போராட்டம்.. எத்தனையோ விஷயங்களை வைத்து போராட்டங்களை இவர்கள் செய்திருக்கலாம்.. ஆனால், இப்படியான இடங்களை தவறவிடும்போதுதான் இன்னொரு கட்சி அங்கே வரப்பார்க்கிறது.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, குறிப்பிட்ட சாதியினர் அதிமுகவில் இருந்து விலகினர்.

கவுண்டர்கள்

கவுண்டர்கள்

குறிப்பாக, முக்குலத்தோர் ஓட்டுக்களாக, தேவேந்திரர்கள் ஓட்டுக்களாக, முத்தரையார் ஓட்டுக்களாக, கவுண்டர்கள் ஓட்டுக்களாக என பிரிந்துசென்றுவிட்ட நிலையில், அந்த ஓட்டுக்களுக்கு அதிமுக குறி வைத்து நகர்கிறது. ஆனால், இதையெல்லாம் திமுக கவனிக்காமல் இல்லை.. தமிழகத்தை சீரமைக்க வேண்டுமானால், 10 வருடம் தேவை என்கிறார் முதல்வர்.. அந்தவகையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், நிலைநிறுத்தி கொள்ளவும், அதற்கான பணிகளை திமுக மேற்கொண்டுதான் வருகிறது.

 ஒளி தரும் திமுக

ஒளி தரும் திமுக

அதேசமயம், மேலும், திமுக எதிர்ப்பு என்று ஒரு மனநிலை எப்போதுமே குறிப்பிட்ட வாக்காளர்களிடம் இருக்கும்.. இவர்களையும் தங்கள் பக்கம் இழுக்க முனைகிறது.. எனினும், அதிமுக என்கிற இயக்கம், மொத்தமாக அடகு வைத்ததன் விளைவு, அந்த சாதி அரசியலை, பாஜகவும் கையில் எடுக்கிறது.. பாஜகவை பொறுத்தவரை, மதம், ஜாதி மட்டும்தான் முக்கியமாக பார்க்கும்.. இவை ரெண்டுமே எளிதில் தீப்பற்றக்கூடியதும் கூட.. ஆனால் திராவிட இயக்க அரசியல் அப்படி கிடையாது.. தீயாக இல்லாமல், அதை சுடராக மாற்றி, காலத்துக்கும் ஒளி கொடுக்கக்கூடியது.." என்றார்.

English summary
Amit shah: AIADMK's minuses are BJP's plus points, says, Sr Journalists Govi Lenin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X