90'ஸ் கிட்ஸ்களின் கனவான கோவா டூர் ஏன் சொதப்புது தெரியுமா? இதை மட்டும் தப்பி தவறி கூட செஞ்சுடாதீங்க
சென்னை: வாழ்க்கையில் கோவா போக வேண்டும் என்று ஒரு முறை கூட யோசிக்காதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் தமிழக இளைஞர்களுக்கு கோவா கனவாக இருக்கும். ஆனால் ப்ளான் செய்பவர்கள் எல்லோரும் கோவா சென்றுவிடுவதில்லை. சரியாக சொல்வதெனில் ப்ளான் செய்பவர்களில் சுமார் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கோவா போவதில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
சரி முதலில் ஏன் எல்லோரும் கோவா போக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்? கட்டற்ற சுதந்திரம், மது, பார்ட்டி என என்ஜாய்மென்ட்டுக்காகதான் கோவா போகிறோம். ஆனால் கோவா போவதற்கு ப்ளான் போடும்போதே ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்பவர்களின் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. இங்கிருந்துதான் பிரச்னை தொடங்குகிறது. உதாரணமாக பஸ்ஸில் போவதா, ரயிலில் போவதா என்கிற கேள்வி வரும்போது எல்லோரும் ரயில் என்று கையை உயர்த்த ஒரேயொரு ஆள் மட்டும் பஸ் என்று கூறுவார்.

அவ்வளவுதான் அவர் ஏதோ பெரும் குற்றம் செய்துவிட்டவரை போல மொத்த டீமும் அவரை வாட்டி எடுத்துவிடும். இது இந்த ஒரு விஷயத்துடன் மட்டும் நின்றுவிட்டால் ஓகே. ஆனால் அது இந்த டூருக்கு போகுவம் வரை எதெற்கெடுத்தாலும் அந்த குறிப்பிட்ட நபர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். கடைசியில் கடுப்பான அந்த நபர் தனக்கு சாதகமாக ஆட்களை சேர்க்க தொடங்குவார். இது ப்ளான் சொதப்பலுக்கு இரண்டாவது காரணம்.
அதேபோல கோவாவில் செலவு செய்ய ஆகும் தொகை, எங்கு தங்குகிறோம், என்ன சாப்பிடுகிறோம் போன்றவற்றை முடிவெடுப்பதில் ஒருமித்த கருத்து தேவை. ஒரு டீமில் அனைவரும் சமமான பொருளாதார வசதியுடன் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் கூட அனைவரும் தாராளமாக செலவு செய்யும் மனம் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே அனைவருடனும் கலந்து பேசாமல் ஓரிருவர் மட்டும் ரூம் புக்கிங் தொடங்கி சாப்பாடு செலவு வரை 'இவ்வளவு' ஆகும் என்று லிஸ்ட் சொல்லிவிடுவார்கள்.

இதை கேட்டவுடன் நம்மாளுக்கு தலையே சுற்றிவிடும் எனவே நிச்சயம் போக வேண்டாம் என்று முடிவெடுத்துவிடுவார். அதனை தனியாக வாயை திறந்து சொல்ல முடியாமல் கூட ஒருவரை சேர்த்துக்கொண்டு அவரை வைத்து சொல்ல வைப்பார். அதேபோல ஏற்கெனவே இந்த டீம் ப்ளான் செய்து சென்று வந்திருக்கும் டிரிப் குறித்து பிளாஷ் பேக் நினைவுக்கு வரும். போன முறையே நல்லா சொதப்பிட்டானுங்க, இந்த முறையும் இப்படிதான் சொதப்புவாங்கனு கூட்டத்தில் ஒருவர் கழன்றுவிடுவார்.
கோவா ப்ளானுக்கு மற்றொரு பிரச்னை வீட்டை சமாளிப்பது. பார்க்குற சொந்தக்காரர்கள் எல்லாம் உங்க பையன அருமையா வளத்திருக்கீங்க என்று சொல்லியிருப்பார்கள். இப்படி இருக்கும்போது ப்ரண்ட்ஸ் உடன் கோவா செல்வதாக தன் மகன் வந்து சொன்னால் எந்த பெற்றோருக்குதான் ஆத்திரம் வராது? அப்படிபட்ட குடும்பத்தில் இருந்து வரும் நபர் எப்போது பாதியிலிலேயே டாடா சொல்லிவிடுவாறோ என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதைவிட நம்பத்தகாத ஆள் யார் எனில் காதலிப்பவர்கள்தான்.

பொதுவாக பசங்க டீம்தான் கோவா ப்ளான் போடும். அப்படி இருக்கையில் இந்த ப்ளானுக்க அடிநாதமாக, அச்சாணியாக இருக்கும் நபர் காதலில் விழுந்த நபராக இருப்பார். எல்லோரையும் கிளப்பிவிட்டுவிட்டு இவரும் ட்ரெய்ன் ஏற காத்திருக்கும் போது அந்த பெண்ணிடமிருந்து ஒரு மெசேஜ் வரும். அதாவது, "என்ன விட்டுட்டு நீ மட்டும் போற இல்ல. பாத்து போயிட்டு வா" எனும் அந்த குறுஞ்செய்திக்காக இந்த நபர் வானில் சீறும் ராக்கெட்டை கூட பாதியில் நிறுத்திவிடுவார். அப்படி இருக்கும்போது கோவா மட்டும் எம்மாத்திரம்?
ஆக ஜாலியா இருக்க கோவா போக யோசித்துவிட்டு அதற்கான ப்ளானிங்கிலே பயங்கர சொதப்பல் செய்துவிட்டால் எப்படி கோவா போக முடியும்? இதனால் கோவா ப்ளான் பெரும்பாலும் சொதப்பல் ஆகிவிடுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications