பொங்கல் பரிசு 1000 ரூபாயை விடுங்க.. மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை.. தூள் கிளப்பும் சூப்பர் மேட்டர்
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட பலரும் ஊருக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.. பொங்கல் பண்டிகைக்கு சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஐந்து நாட்கள் விடுறைவிடப்பட்டுள்ளது. ஆனால் வெறும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சென்னை, பெங்களூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

சென்னை, பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த மக்கள், சொந்த ஊருக்கு நேற்றே செல்ல தொடங்கிவிட்டனர், பெரும்பாலான மக்கள் இன்றும், நாளையும் சொந்த ஊருக்கு போக உள்ளார்கள். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி சமயத்தில் இதேபோன்ற எண்ணிக்கையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பினார்கள்.
பொங்கலுக்கு நீலகிரி போனா நீங்களே அசந்துடுவீங்க.. நாடுகாணி போங்க.. ஊட்டிக்கே உற்சாகமான விஷயம்
பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை நான்கு நாட்கள் இயல்பாகவே விடுமுறைவிடப்படும். போகி பண்டிகை எப்போதாவத ஒருமுறை திங்கள் அன்று ஆரம்பிக்கும் அப்படி ஆரம்பித்தால், கிட்டத்தட்ட 8 நாட்கள் விடுறை (வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால்) கிடைக்கும். அந்த வகையில் இந்த முறை போகி பண்டிகை ஞாயிறு அன்று விழுந்துள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய ஐந்து நாட்கள் பண்டிகை காரணமாக விடுமுறை கிடைத்துள்ளது. வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் சுய விடுமுறை எடுத்தால், அடுத்ததாக சனி மற்றும் ஞாயிறு வருகிறது. ஒட்டுமொத்தமாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அதேநேரம் பள்ளிகளுக்கு, ஐடி நிறுவனங்களுக்குத்தான் இந்த நடைமுறை பொருந்தும். அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
அதேநேரம் அறிய வேண்டிய முக்கியமான விஷயமும் உள்ளது. பள்ளிகளுக்கு சனிக்கிழமை இந்த முறை பள்ளிகள் செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஜனவரிர 20ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு கண்டிப்பாக விடுமுறை இல்லை. எனவே வங்கிகளில் பணியாற்றுவோருக்கும் இது பொருந்தாது.
தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை பொங்கலுக்கு ஒருநாள் தான் விடுமுறை தருவார்கள். ஞாயிறு அல்லது செவ்வாய்கிழமை தான் விடுமுறை எடுக்க முடியும் என்பதால் பெரிய அளவில் இந்த விஷயம் அவர்களுக்கு கை கொடுக்காது. அதே பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்களுக்கு நிச்சயம் இந்த வாரம் கொண்டாட்டம் தான்.. பலரும் இந்த வார இறுதியில் அல்லது பொங்கல் முடிந்த மறு நாள் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள் என்பதால், சுற்றுலா தளங்களில் அதிக கூட்டம் நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications