வெறும் 30 ரூபாயில் கோடையை குடும்பத்துடன் என்ஜாய் செய்ய சூப்பர் ஸ்பாட்! குற்றாலம் போன ஃபீல்!
தென்காசி: வெறும் 30 ரூபாயில் குடும்பத்துடன் தென்காசியில் ஒரு நாள் டிரிப்புக்கு ஏற்ற இடம் தெரியுமா?
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. சிலருக்கு பள்ளிகள் ஜூன் 5, 7 ஆகிய தேதிகளில் திறக்கப்படுகின்றன. தற்போது சென்னை ஹாட்டாக இருப்பதால் மக்கள் மலைபிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள்.
எத்தனை நாளுக்குத்தான் ஊட்டி, கொடைக்கானலையே பார்த்துவிட்டு வருவது. விதவிதமான ஊர்களையும் இடங்களையும் சுற்றி பார்க்க வேண்டாமா? குளிர்ச்சியை அளிக்கும் இடங்களில் நமக்கு தெரிந்த இடங்களை விரல் விட்டு எண்ணலாம்.

ஆனால் நமக்கு தெரியாத இடங்கள் நிறைய உள்ளன. அவை ரீல்ஸ்கள் மூலமும் பிளாக்கர்ஸ் மூலமும் தெரியவந்து அந்த இடத்திற்கு சென்றால், ஆஹா இந்த இடத்தை இத்தனை நாள் எப்படி மிஸ் செய்தோம் என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். அந்த அளவுக்கு அழகான இயற்கை வளங்களை கொண்ட இடங்கள் நிறைய உள்ளன.
தென்காசியை எடுத்துக் கொண்டால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது சாரல் மழை பெய்யும். அத்துடன் நிறைய அருவிகளும் சிறிய ஓடைகளும் நிறைய இருக்கும். இங்குள்ள குற்றால அருவியில் ஆண்டுதோறும் மக்கள் குவிவார்கள். அங்கு சில நேரங்களில் தண்ணீர் வரத்து இருக்கும், சில நேரங்களில் இருக்காது.
பொழுதுபோக்கிற்கு சிறந்த இடம் புளியங்குடி தென்னந்தோப்புகளுக்குநடுவில் அமைந்திருக்கிறது நீச்சல் குளமும் அருவி செட்டப்பும்! இந்த கோடை காலத்தில் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க ஒரு நாள் டிரிப்பாக இங்கு செல்லலாம். வெறும் 30 ரூபாய் கட்டணமாக செலுத்திவிட்டு எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் குடும்பத்துடன் நீச்சல் அடிக்கலாம்.

புளியங்குடிக்கு போற வழியில் மேற்கு தொடர்ச்சி மலையை பார்த்தபடி இரு புறமும் பசுமையான வயல்கள் இருக்கும். மரத்தினாலேயே குகை மாதிரி அமைந்திருக்கும் சாலைகள் இருக்கும்.புளியங்குடி செல்லும் சாலையில் 2 கி.மீ. வயல்களுக்கு நடுவே பயணம் செய்தால் இந்த இடம் வந்துவிடும். கூகுள் மேப் போட புளியங்குடி குருசாமி கிணறு நேச்சுரல் ஃபால்ஸ் என போட வேண்டும்.
இங்கு வாகனங்களை பார்க்க செய்ய எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் குளிப்பதற்கு ஒருவருக்கு ரூ 30 வசூலிக்கிறார்கள். நண்பர்கள், குடும்பத்தினருடன் செல்ல நல்ல இடம். குற்றாலத்தை மிஸ் பண்றோமே என நினைப்போர் இங்குள்ள அருவி செட்டப்பில் குளித்து மகிழலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications