For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தான்குளம், தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்த சிறையில், நீதிபதி ஹேமா ஆய்வு

Google Oneindia Tamil News

நெல்லை: சாத்தான்குளம் தந்தை, மகன் விசாரணையில் உயிரிழந்த வழக்கில் ஏற்கனவே நீதிபதி பாரதிதாசன் விசாரித்த நிலையில், தற்போது தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா நேரில் விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் அடுத்தடுத்து, உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Sathankulam death: Tuticorin Judge Hema visit Kovilpatti jail

இந்நிலையில் கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா சனிக்கிழமை இரவு நேரில் விசாரணை நடத்தினார். ஏற்கனவே நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்திய நிலையில், தற்போது நீதிபதி ஹேமா விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறி வருகிறது.. விளாசும் ஸ்டாலின்உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறி வருகிறது.. விளாசும் ஸ்டாலின்

English summary
Judge Bharathidasan has already inquired into the death of the father and son of the Sathankulam police, today Tuticorin Judge Hema was visit Kovilpatti jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X