தொடர் தோல்வி.. அம்பையில் அசத்துவாரா சீமான்? கடந்த தேர்தல் ரிசல்ட்டை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளராக களமிறங்க போவதாக சீமான் அறிவித்திருக்கிறார். கடந்த கால தேர்தல் ரிசல்ட்டை பார்க்கும் போது, சீமான் வெற்றிப்பெற எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என்பது ஓரளவுக்கு கணிக்கக்கூடியதாக இருக்கிறது.

இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அம்பாசமுத்திரம் உள்ளிட்ட, 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் போட்டியிடும். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் வேட்பாளராகப் போட்டியிடுவேன். பொதுவேட்பாளர் என்ற கருத்தே தவறானது. அனைத்து சாதியினருக்கும் நான் பொதுவேட்பாளர்தான்" என பேசியிருந்தார்.

Seeman

இந்த தொகுதியை பொறுத்தவரை வெற்றியை தீர்மானிப்பது முக்குலத்தோர் (தேவர்) மற்றும் பட்டியல் சமூகத்தினராக இருக்கின்றனர். அதிகமாக மறவர், தேவர் சமுதாயத்தை சார்ந்த மக்கள் இருக்கின்றனர். மொத்த வாக்குகளில் இவர்களின் பங்களிப்பு 24 சதவீதமாக இருக்கிறது. அதேபோல, தேவேந்திர குல வெள்ளாளர் மற்றும் பள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் 15 சதவீதமாக இருக்கின்றனர். மொத்தமாக தலித் கிறிஸ்தவர்களையும் சேர்த்து.. பட்டியல் சமூகத்தினர் வாக்காளர்களின் எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டால் 17 சதவீதம் வரை இருக்கும் என, 2011 கணக்கெடுப்பு தரவுகள் கூறுகின்றன.

அதேபோல தொகுதியின் வெற்றியை தீர்மானிப்பதில் நாடார் சமூகத்தினரும் இருக்கின்றனர். இதுபோக பிராமணர்கள், இல்லத்து பிள்ளைமார்கள், செட்டியார்கள் செங்குந்த முதலியார் மற்றும் முஸ்லிம்களும் இருக்கின்றனர்.

கடந்த 2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா 65,589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது, பதிவான மொத்த வாக்குகளில் 34.30 சதவீதமாகும். அதற்கு முன்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 48.41 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த இரண்டு தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் நிலையாக இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 13,735 வாக்குகள், அதாவது பதிவான மொத்த வாக்குகளில் 7.80% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது. அதேபோல 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும், பதிவான மொத்த வாக்குகளில் 7.80% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது.

தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை வீழ்த்த வேண்டும் எனில், அதிமுக மற்றும் திமுகவின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் மட்டும்தான் நாம் தமிழர் கட்சியால் வெற்றி பெற முடியும். ஏனெனில், கடந்த தேர்தலில் 28.04 சதவீத வாக்குகளை தமிழக வெற்றி கழகம் பெற்றிருக்கிறது. அதேபோல காங்கிரஸ் 28.95% வாக்குகளை பெற்றிருக்கிறது.

இப்பொழுது, தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் இருப்பதால்.. மொத்த வாக்கு சதவீதம் 50 சதவீதத்தை தாண்டும். இதை ஈடு செய்ய வேண்டுமெனில்.. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பு வாக்குகளையும் ஒன்றிணைக்க வேண்டும். சீமானை பொது வேட்பாளராக கட்சிகள் நிறுத்துமா? என்பதும் கேள்விக்குறி. எனவே தேர்தல் அறிவிப்பு வரை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+