Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுளே போக விரும்பும் கனவுப்பாதை.. வண்டியை விடுங்க வாகமனுக்கு.. திறக்கப்பட்ட அற்புதமான பாலம்

Subscribe to Oneindia Tamil

தேனி: இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களால் விரும்பப்படும் வாகமன் சுற்றுலா தலத்தில் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வாகமன் கண்ணாடி பாலம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கண்ணாடி பாலத்தில் ஒரு நேரத்தில் 15 பேர் மட்டுமே நடந்து செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த உலகின் மிகவும் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் பல அற்புதமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டமும், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டமும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் ஆகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள் எல்லாமே உலகப்புகழ் பெற்றவை. இதில் இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை மூணாறு, தேக்கடி ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக வாகமன் இருக்கிறது.

tour munnur

தேக்கடி, சபரிமலை, மூணாறு வரும் அத்தனை பேரும் விரும்பி செல்லும் இடமாக வாகமன் இருக்கிறது. தேனியில் இருந்து 106 கிலோ மீட்டர் தூரத்தில் வாகமன் அமைந்துள்ளது. தேனி மாவட்ட எல்லையான குமுளியில் இருந்து வெறும் 42 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானல், மூணாறுக்கு அடுத்தபடியாக தேக்கடியும் அதனை ஒட்டியுள்ள வாகமனும் பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாக உள்ளது. வாகமனுக்கு குமுளியில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். ஏனெனில் முற்றிலும் மலைப்பகுதிக்குள் உள்ள பகுதியாகும். போகும் வழி எல்லாம் மிக அற்புதமாக இருக்கும்.

வாகமனை பொறுத்தவரை கேரள மாநில சுற்றுலாத்துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சுற்றுலா மேம்பாட்டு துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலம் மலையடிவாரத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இது மொத்தம் 40 மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலம், கடந்த 2023-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்த கண்ணாடி பாலத்தில் ஒரு நேரத்தில் 15 பேர் மட்டுமே நடந்து செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இவர்கள் 5 நிமிடம் நின்று மலை அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கையும், இயற்கை எழில்மிகு காட்சிகளையும் ரசிக்கலாம். அந்த பாலத்தில் நடந்து செல்ல மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ.250 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த பாலத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

tour munnur

கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியதால், பாதுகாப்பு கருதி பாலம் மூடப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு பாலத்தை திறக்க வேண்டும் என்று இடுக்கி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினு, அரசுக்கு கோரிக்கைவைத்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி ஆய்வு செய்தார். அதன்பின்னர் பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து கண்ணாடி பாலத்தை திறக்க அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் வாகமன் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது. இதையறிந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் வாகமனுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாடுவதற்கு வாகமன் மிகச்சிறப்பான சுற்றுலாத் தலம் என்பதால் பலரும் படை எடுக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+