ஜோதிகா டூர் போனாங்களே! அந்த நேபாளத்தில் அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலுக்குக் கூட ஓட்டு போட வராமல் தனது தோழியுடன் நேபாளத்திற்கு நடிகை ஜோதிகா சுற்றுலா சென்ற நிலையில் அந்த பகுதியில் என்னென்ன ஊர்களை சுற்றி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் வாலி படத்தில் ஒரு சிறிய கற்பனை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதையடுத்து அவர் சூர்யாவுடன் சேர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார்.

பின்னர் சினேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, ஜில்லினு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சூர்யாவுடன் இணைந்து நடித்த போது ஜோதிவுக்கு அவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2005 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு தியா, தேவ் ஆகிய இரு குழந்தைகள் உள்ளன. ஜோதிகா அண்மையில் கோயிலுக்கு பணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது குறித்து ஆனால் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படாமல் அப்படியே இருப்பதாகவும் பேசியிருந்தது சர்ச்சைக்குரியதாக இருந்தது.
அது போல் சமூக பிரச்சினைகளுக்காக சூர்யா, கார்த்தி ஆகியோரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்து வந்து ஜனநாயக கடமை ஆற்றுவது முக்கியமானது என வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அப்போது ஜோதிகா மேடம் வரவில்லையா என செய்தியாளர்கள் கேட்ட போது அதற்கு சூர்யா பதில் ஏதும் கூறாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்த நிலையில் ஜோதிகா ஏதாவது சூட்டிங்கில் இருந்திருப்பாரோ என நினைத்த வேளையில் அவர் நேபாளத்திற்கு தனது தோழியுடன் சுற்றுலா சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
இது நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக் கூடம் கட்ட வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டு இந்திய குடிமகளுக்கான அடிப்படை கடமையான வாக்களிக்காமல் ஜோதிகா சுற்றுலா சென்றுள்ளார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நேபாளத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். நேபாளத்தில் பசுபதிநாதர் கோயில் உள்ளது. இது காட்மாண்டுவில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பழங்கால சிவன் கோயில் ஆகும். அடுத்தது பவுதநாத் ஸ்தூபி, இது நேபாளில் மிகப் பெரிய ஸ்தூபிகளில் ஒன்று. யுனெஸ்கோ அமைப்பால் சான்று பெற்றது. இந்த கோயிலில் கலர் கலராக பிரார்த்தனை கொடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
போக்ரா பள்ளத்தாக்கு - காட்மாண்டுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு பேருந்து, கார், விமானம் மூலம் செல்லலாம். இந்த இடத்தில் இருந்து இமயமலையை பார்க்கலாம். அது போல் இங்குள்ள பேவா ஏரியில் படகு சவாரி செல்லலாம். மகேந்திர குஃபா அதாவது சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட குகை. இது முழுவதும் இருட்டாகவே இருக்கும்.
தாமெல் என்ற பகுதி உள்ளது. இங்கு கடைகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் பார்கள், கஃபேக்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன. லாங்டாங் தேசிய பூங்கா உள்ளது. இது இயற்கை சூழலில் சாகசங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. இங்கு சிவப்பு பாண்டா, இமயமலையின் கருப்பு கரடி, திபெத்திய ஸ்னோகாக் உள்ளிட்ட விலங்குகளை பார்க்கலாம். இங்கு மலை ஏறுதல் மூலம் நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.
அது போல் நேபாளத்திலிருந்து இமயமலைத் தொடரை பார்க்க விரும்பினால் நாகர்கோட் செல்லலாம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனங்களையும் பார்க்கலாம். சுற்றுலாவுக்கு மட்டுமில்லை, தேனிலவுக்கும் ஏற்ற இடம் இதுதான். எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே உள்ள சாகர்மாதா பூங்காவுக்கு செல்லலாம். இந்த பூங்காவில் தனித்துவமான செடிகள், மரங்கள் உள்ளன. இங்கு மிகவும் அரிதான பனிச் சிறுத்தைகளும் உள்ளன.
அடிக்கும் சம்மருக்கு நேபாளத்திற்கு சென்றால் பனி சூழ்ந்த பகுதியில் அப்படியே சொர்க்கத்தில் இருப்பதை போல் இருக்கும். மனதிற்கு இதமாகவும் இருக்கும். எப்போதும் வேலை, டென்ஷன் என இருக்கும் மனதிற்கு நல்ல ரிலாக்சேஷனாக இந்த நேபாள பயணம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications