அரபிக்கடல் + வங்கக்கடல்.. சுழண்டடிக்கும் சூறாவளி.. அடேங்கப்பா.. பொளந்து கட்ட போகுது மழை.. அலர்ட்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.. இந்நிலையில், வருகிற 17ம் தேதி வரை தமிழகத்துக்கு மழை இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மிதமான மழை: நாளைய தினம் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, 14ம் தேதி தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15ம் தேதியும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 16ம் தேதி, 17, 18ம் தேதிகளிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள்: மீனவர்களை பொறுத்தவரை வங்கக்கடல், அரபிக்கடல் என 2 கடலிலுமே சூறாவளி வீசப்போகிறதாம்.. நாளை, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளிலும், மத்திய கிழக்கு, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளிலும் சூறாவளி வீசப்போகிறது.
14, 15ம் தேதியில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளில் பகுதிகளிலும், மத்திய கிழக்கு, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளிலும், 16ம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசப்போகிறது.
அரபிக்கடல்: அரபிக்கடலிலும் இன்று முதல் 16ம் தேதி வரை மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கர்நாடக - கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும். இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் மழை: அந்தவகையில், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த 1 மணி நேரத்தில், மற்றொரு அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. அதில், அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications