கிரேட் எஸ்கேப்.. ஆபத்திலிருந்து சென்னை தப்பியது இப்படித்தான்..ஆனா மழையில் இப்படியொரு மேட்டர் இருக்கே
சென்னை: மிகப்பெரிய ஆபத்திலிருந்து சென்னை தப்பியதாகவும், சென்னைக்கு அதிதீவிர மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.. சென்னை எப்படி தப்பியது என்பது குறித்தும் ஸ்ரீகாந்த் விளக்கமளித்துள்ளார்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இன்றும், நாளையும் சென்னையில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றும், இதனால் தமிழகத்தில் 12 முதல் 21 செ.மீ., மழை பொழிவுக்கு இன்று வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.. இதனால், அதிதீவிர மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பிரதீப் ஜான் தந்துள்ள பேட்டியில், "இன்று அதி கனமழை பெய்யும் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை.. வடசென்னை, திருவள்ளூர் பகுதிகளில் மட்டுமே நேற்றிரவு கனமழை பெய்திருக்கிறது.. எனவே, சென்னைக்கு ஆபத்து இல்லை.. கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது..
மிதமான மழை: மிதமான மழை மட்டுமே பெய்துள்ளது.. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு மழை பெய்யக்கூடும்.. இப்போதைக்கு சென்னை அருகே காற்றழுத்தம் கரையை கடப்பதால், நாளையும், நாளை மறுநாளும் மழை இருக்கும்.. 18ம் தேதியும் மழை இருக்கும்.. மழைக்கான வாய்ப்பு மட்டுமே இருக்குமே தவிர, பெரிய மழை இருக்காது.. முதல் மழையே பெரிய மழையாக வாய்ப்புமில்லை.. எனவே சென்னைவாசிகள் அச்சப்பட தேவையில்லை" என்று பிரதீப் ஜான் நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளார்.
அதேபோல, தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, சென்னையில் மழை தொடரும், ஆனால், அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறையும் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆபத்திலிருந்து சென்னை தப்பியது எப்படி என்பது குறித்தும் விளக்கம் தந்துள்ளார்.
வடமேற்கு திசை: ஸ்ரீகாந்த் பேசும்போது, "நேற்றிரவில் மேகக்குவியல்கள் வடமேற்கு திசையில் நகர்ந்துவிட்டன.. இதனால், இரவு முழுவதும் நகர்வு வடக்காக இருந்ததே, மேற்காக இல்லை.. வடமேற்கு திசையில் நகர்ந்ததாக, மேகக்குவியல்கள் நகர்ந்துவிட்டதால், தெற்கு ஆந்திரா கரைப்பகுதிகளில் மழை உள்ளன.. குறிப்பாக, ஸ்ரீஹரிகோட்டா, பழவேற்காட்டுக்கு வடக்கிலிருக்கக்கூடிய ஆந்திர பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது
அதேபோல சென்னைக்கு வடமேற்கு திசையில் இருக்கக்கூடிய சத்தியமேடு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.. 50 முதல் 75 கி.மீட்டருக்கு வடக்காக அந்த நகர்வு இல்லையானால், இந்த மழை நிகழ்வுகள் எல்லாமே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் நடந்திருக்கும்.. இதனால், பெரிய மழை தாக்கியிருக்கும்.
ஆபத்து இல்லை: ஆனால், அவை வடமேற்கு திசையில் நடந்துவிட்டதாலும், கிழக்கு பகுதிகளில் வந்துவிட்டதாலும், ஆந்திராவில்தான் மழை அதிகமாக இருக்கும். பெரிய நிகழ்வுகளும் தெற்கு ஆந்திராவிலேயே நடக்கும். ஆனால், மேகக்கூட்டங்கள் காரணமாக சென்னைக்கு கனமழை தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
1000 கிமீ நீண்ட மழை மேகங்கள்.. கொட்டி தீர்க்குதே கனமழை.. இப்படி ஒன்று நடந்ததே இல்லை போல -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications