சென்னைக்கு சுத்து போட்டுருச்சே.. 3 மாவட்டங்களில் கனமழை விளாசி தள்ளப்போகுது! கவனமா இருங்க மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், "தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30.09.2023 முதல் 03.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பூண்டி (திருவள்ளூர்) 10, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 9, வாலாஜா (ராணிப்பேட்டை) 8, ஆற்காடு (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 5, அம்பத்தூர் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை) தலா 4, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கல்லந்திரி (மதுரை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), தேவாலா (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), பொன்னை அணை (வேலூர்) தலா 3, தொழுதூர் (கடலூர்), பவானிசாகர் (ஈரோடு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சூலகிரி (கிருஷ்ணகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), சொளிங்கர் (ராணிப்பேட்டை), ஓமலூர் (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்), மாதவரம் AWS (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), KVK கட்டப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), விரிஞ்சிபுரம் KVK (வேலூர்) தலா 2, தாம்பரம் (செங்கல்பட்டு), சென்னை ஆட்சியர் அலுவலகம், எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), கத்திவாக்கம் (சென்னை), மாதவரம் (சென்னை), கொளத்தூர் (சென்னை), வானகரம் (சென்னை), கொத்தவாச்சேரி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), வடகுத்து (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), குழித்துறை (கன்னியாகுமரி), சிட்டம்பட்டி (மதுரை), புலிப்பட்டி (மதுரை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), கல்லணை (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தேனி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அம்முண்டி (வேலூர்), வேலூர் (வேலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), திரூர் KVK (திருவள்ளூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 29.09.2023 மற்றும் 30.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.09.2023 முதல் 01.10.2023 வரை: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் 29.09.2023 மற்றும் 30.09.2023: கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications