Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் ரோட்டில் என்னவாம்.. அங்கே "முடிச்சூர்" ரோட்டில் வேற பரபரப்பு.. அச்சச்சோ "பொங்கிடுச்சே நுரை"

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பெய்த பலத்த மழை காரணமாக, சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. இதனிடையே, முடிச்சூர் பகுதியில் திடீர் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும்... அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.,. விவசாயிகளின் ஆதாரமே இந்த மழைதான்.

ஆனால் சென்னையில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே மழைபொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.. தென்மேற்கு பருவமழை தொடங்கும்போதே, சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

Chennai rain and well broke in Chengalpet Madichur due to heavy rain in tamil nadu

என்ன காரணம்: இதற்கு முன்பு 1991-ம் அண்டு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவில் மழை பெய்தது.. பின்னர், 1996-ல், சென்னையில் ஜூன் மாதத்தில் அதிகமாக மழை பெய்தது.. இப்போது 27 வருடத்துக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்ததாக சொல்கிறார்கள்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜூன் மாதத்தில், நேற்று வரை இயல்பாக 1.6 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று ஒரே நாளில் இயல்பை விட 22 சதவீதம் குறைவாக மழை பெய்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்..

அதாவது, நேற்று ஒரே நாளில் 3 மடங்கு அதிகமாக மழை பெய்துவிட்டதாம். இனியும் மழை இருக்கும் என்கிறார்கள். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணிவாக்கம்: அதன்படியே, சென்னை மற்றுமின்றி புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், படைப்பை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்தது.. இதன்காரணமாக, ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது...

இதனிடையே செங்கல்பட்டில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, சென்னையை அடுத்த முடிச்சூரில் விவசாய கிணற்றின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்துவிட்டதால், மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது..

Chennai rain and well broke in Chengalpet Madichur due to heavy rain in tamil nadu

ரோட்டோரம் கிணறு: முடிச்சூர் ரங்கா நகரில் இந்த விவசாய கிணறு உள்ளது.. கனமழை காரணமாக, இதன் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. கிணற்றை சுற்றி மழைநீர் தேங்கியதால் கிணற்றின் சுற்றுச்சுவர் பலமிழந்து இடிந்து விழுந்ததாக சொல்கிறார்கள்.. தொடர்ந்து மழை நீடித்ததால், அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த கிணறு முழுவதுமாக நிரம்பிவிட்டது.. மேலும், கிணற்றிலிருந்து தண்ணீரும் வெளியேற ஆரம்பித்தது.

கிணற்றில் இருந்து, வெளியேறும் தண்ணீர், கடல் அலையை போல எழும்பி வெளியே வந்து கொண்டிருக்கிறது.. இந்த கிணறு சாலைக்கு பக்கத்திலேயே இருப்பதால், அந்த பகுதியில் தேங்கிய மழைநீர் அனைத்தும் கிணற்றுக்குள் கொட்டி வருகிறது.. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வாகன ஓட்டிகளால், அந்த பக்கம் செல்ல முடியவில்லை.. கிணறு உடைந்து நீர் கொட்டும் வீடியோதான், இணையத்தில் வெளியாகி கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+