சென்னை மக்களே அலர்ட்.. ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்! உஷார்!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குட்டி பிரேக் எடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கையில், "இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை (நவ.2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவ.3ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
