வங்கக் கடலில் வெயிட்டான சம்பவம்.. கொஞ்சம் கொஞ்சமாக உருமாறும் ‘முரசு புயல்’.. எப்போது கரையை கடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இன்று காலை நிலவரப்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் நிலையில், நாளை இது புயலாக வலுப்பெறும் என்றும், பின்னர் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில் உருவான புயலுக்கு 'ஒர்னாப்' என வங்கதேசம் பெயர் வைத்த நிலையில், இந்த புயலுக்கு 'முரசு' என பெயர் சூட்டப்பட உள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

Bay of Bengal Weather

இன்று (நவம்பர் 1) காலை 5.30 மணி நிலவரப்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், 11.5 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.4 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இது மையம் கொண்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 700 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
தொடர்ந்து நகரும் இந்தப் புயல், நவம்பர் 2ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் தீவிர புயல், நவம்பர் 3ஆம் தேதி காலை ஆந்திர மாநிலத்தின் தெற்குக் கடலோரப் பகுதியில் நெல்லூர் - நரசாபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+