செமஸ்டர் தேர்வுகள்.. இனி இந்த தேதிகளில் நடக்கும்! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு
சென்னை: புயல் கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக புதிய அட்டவணையையும் வெளியிட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை ஒட்டி ஆந்திரா பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னைக்கு வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியது.

மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.
பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வரை சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது. மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் (டிசம்பர் 3, 4) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் டிச.4ம் தேதி நடைபெற இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் ஒத்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிச.11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications