சென்னையில் இன்று இரவு முதல் மழை ஆரம்பம்.. நாளை கனமழை வெளுக்கும்.. டெல்டா வெதர்மேன் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் இன்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாளை முதல் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய தினமே தமிழகம் முழுக்க மழை வெளுத்து வாங்கியது. சென்னையிலும் கனமழை விட்டு விளாசியது. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் வெயில் அடித்தது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இன்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்றும், நாளை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கில் சுமார் 780 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
வலுவான புயலாக மாறுமா?
தொடர்ந்து நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திரா மற்றும் வட கடலோர தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும்போது, வளிமண்டலத்தில் நிலவும் அதிக காற்றழுத்த வேறுபாடு மற்றும் வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக அதன் வலிமை குறைய வாய்ப்புள்ளது. எனவே இது வலுவான புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
DWM DEPRESSION UPDATE -7 | DATED 1ST NOV, 2026 | 6:00 AM IST#Topic: Depression over Southwest Bay of Bengal & adjoining Southeast Bay of Bengal. Further intensification into Deep Depression likely, with shear & dry air expected to limit strength near the coast.==> The Depression persists over the Southwest Bay of Bengal and adjoining Southeast Bay of Bengal, roughly 780 km east-southeast of #Chennai as of 5:30 AM IST today.==> It is likely to move west-northwestwards and intensify further into a Deep Depression during the next 6 hours. Continuing the west-northwest track, it is expected to reach the Westcentral Bay of Bengal off South Andhra Pradesh and adjoining North Coastal Tamil Nadu coasts during the next 36 hours.==> High vertical wind shear and dry air intrusion are expected to disturb the system’s core as it approaches the land. This makes the IMD’s Severe Cyclonic Storm category outlook surprising at this stage.==> Very slow movement or a stalling scenario is possible once the system gets close to the coast. Overall, a sheared system is heading towards west central Bay of Bengal and is likely to bring rainfall to South coastal Andhra Pradesh and adjoining North Tamil Nadu.==> No significant wind damage is expected over South Coastal Andhra Pradesh or North Tamil Nadu. Heavy to very heavy rainfall is likely over South Coastal Andhra Pradesh.#Impact expected over Tamil Nadu:Day 1 (01.11.2026)==> Light to moderate rains likely to commence over extreme North Tamil Nadu districts such as #Chennai, #Thiruvallur, #Chengalpet and #Kanchipuram during today night hours.Day 2 (02.11.2026) ==> Widespread moderate to rather heavy rains expected over #Chennai, #Thiruvallur, #Kanchipuram, #Chengalpet and #Ranipet districts. Heavy rains likely at isolated places over #Chennai & #Thiruvallur districts.Day 3 (03.11.2026)==> Widespread moderate to rather heavy rains accompanied by lightning & thunderstorms expected over many places of North Tamil Nadu including #Chennai, #Thiruvallur, #Chengalpet, #Kanchipuram, #Ranipet, #Vellore, #Tiruvannamalai, #Tirupattur, #Krishnagiri, #Salem and #Dharmapuri districts. Isolated heavy rainfall possible over North Tamil Nadu.#Importantupdate: Fishermen advised not to venture sea during next 4 days. Stay tuned with @Deltarains for further updates.Thanks & Regards R. Hemachander M.E., (PhD)., Climate Activist | Independent Weather Blogger#TamilNaduRains #ChennaiRains #NortheastMonsoon #NEM2026 #BayOfBengal #deltaweatherman #deltarains #hemachanderweather
— Deltaweatherman Hemachander (@Deltarains) November 1, 2026
இதனால் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தெற்கு கடலோர ஆந்திராவில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அதே நேரம் ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் காற்றின் காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழகத்தை பொறுத்தவரை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கும். நாளை திங்கட்கிழமை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.. என்று கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
