ஆஹா.. சூப்பராம்.. 2015யை ஒப்பிட்டு தமிழக அரசை புகழ்ந்த டைரக்டர் லிங்குசாமி! ஏன் தெரியுமா?
சென்னை: சென்னை வெள்ள மீட்பு நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது. தமிழக அரசு மாநகராட்சி பணியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதை 2015ம் ஆண்டு வெள்ளத்தை அனுபவித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்'' என பாராட்டியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. இந்த புயலால் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னையில் மழை இல்லை என்றாலும் கூட மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு பொதுமக்களுக்கு பெட்ஷீட், அரிசி உள்பட பல நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு உணவு, பால் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் செய்த வெள்ள மீட்பு பணியை பார்த்து திரைப்பட இயக்குனர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னை மழையின் காரணமாக விமானங்கள் இயங்காததால் கடந்த 3 நாட்களாக தஞ்சாவூரில் இருந்தேன். சென்னை வெள்ளத்தை பார்த்து கவலையடைந்தேன்.
நேற்றிரவு திரும்பி வந்தபோது அடையாறில் ஒருவரை டிராப் செய்ய போனேன். விமான நிலையத்தில் இருந்து அடையாறு , வளசரவாக்கம் செல்லும் அனைத்து வழிகளிலும் தமிழக அரசு, அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் சிறப்பான பணியை செய்திருப்பதை பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.
2015ம் ஆண்டு வெள்ளத்தை அனுபவித்தவன் என்ற அடிப்படையில் கூற வேண்டும் என்றால் இந்த மீட்பு நடவடிக்கைகள் சரியான திசையில் முன்னேறி செல்கிறது என சொல்லலாம். இருப்பினும் நிறைய பணிகள் இன்னும் செய்ய வேண்டி யுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து பலர் மீட்கப்பட வேண்டி உள்ளது. இதனால் அரசு இன்னும் இந்த பணியை விரைவுப்படுத்தி சென்னையை மீட்கும் என நம்புகிறேன். . இதற்கு என்னால் முடிந்த அளவுக்கு அதிகாரிகளுக்கு உதவ விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications