மிரட்டும் மழை.. புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: தொடர் மழை காரணமாக புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏறத்தாழ இயல்பான அளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. எனவே ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

“திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 21.20 அடி. முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். இந்த நிலையில் புதன்கிழமை நீர் இருப்பு 19.25 அடியாகவும், கொள்ளளவு 2,862 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழையினால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது நீர் வரத்து விநாடிக்கு 570 கன அடியாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும். எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அதேபோல செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது வந்தது. தற்போது ஏரிக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications