இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஈரோடு, விருதுநகர், நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கும், நாளை தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வானிலை மையம் அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் ஒரு சில இடங்களில் மழையும் கொட்டி வருகிறது. நேற்றும் தமிழகத்தில் மழை பெய்த நிலையில் இன்றும் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று 4 மாவட்டங்களில் கனமழை
இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை வரை, சுமார் 0.9 கிமீ உயரத்தில் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
விருதுநகர், தேனி, திண்டுக்கல்
6 ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 7 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-04-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோர மாவட்டங்கள்
9 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 10 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
11 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
05-04-2026 முதல் 07-04-2026 வரை: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3' செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 08-04-2026 மற்றும் 09-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையில் மழை பெய்யும்
சென்னையில் இன்று (05-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
சென்னையில் நாளை (06-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு (செமீ)
* ஊத்து (திருநெல்வேலி) 7. நாலுமுக்கு (திருநெல்வேலி) 7,
* பொன்னை அணை (வேலூர்) 5. காக்காச்சி (திருநெல்வேலி) 5. பார்வூட் (நீலகிரி) 5, தொழுதூர் (கடலூர்) 5,
* சாத்தூர் (விருதுநகர்) 4. மாஞ்சோலை (திருநெல்வேலி) 4, வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 4, பெரம்பலூர் (பெரம்பலூர்) 4. TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்) 4, வேப்பந்தட்டை ARG (பெரம்பலூர்) 4, திருத்தணி PTO (திருவள்ளூர்) 4, மணிமுத்தாறு (திருநெல்வேலி) 4, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) 4, பெலாந்துறை (கடலூர்) 4, கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்) 4,
* பெரியாறு (தேனி) 3, பாடலூர் (பெரம்பலூர்) 3, குப்பநத்தம் (கடலூர்) 3, விருதுநகர் AWS (விருதுநகர்) 3, மணிமுத்தாறு அணை ARG (திருநெல்வேலி) 3, தழுதலை (பெரம்பலூர்) 3, கீழச்செருவை (கடலூர்) 3 செமீ மழை பெய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications