சென்னை, கோவை உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடையில் வெயில் பொதுவாக கொளுத்தும் என்ற நிலைக்கு பதிலாக பல்வேறு மாவட்டங்களில் இந்த முறை மழையால் வெயில் குறைந்து குளிராகி உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
இதன்காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும். இதன் காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கேரள பகுதிகளில் வருகிற 27-ந்தேதி தொடங்கும். கோடை மழையை பொறுத்தவரையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 192.7 மீட்டர், இயல்பு நிலை 101.4 மி.மீட்டர் சராசரி நிலையை விட 90 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் மார்ச் 1ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 345% இயல்பைவிட அதிக மழை பெய்திருக்கிறது. கள்ளக்குறிச்சியில் இயல்பான மழை அளவு 6 செ.மீ. என்ற நிலையில் 28 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பதிவாகியுள்ளது" இவ்வாறு கூறினார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications