வெயிலிருந்து விடை.. இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்ய போகிறது.. வந்தது சூப்பர் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் மே இரண்டாம் வாரம் மழை பெய்யும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை ரெயின் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை ரெயின் வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பில், இந்த வாரம் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும். ஆனால் அடுத்த வாரம் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்யலாம். கோடை மழை அடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சூடு குறையும். ஆனால் வடக்கு மாவட்டங்கள், தெற்கு ஆந்திர மாவட்டங்களுக்கு இது பொருந்தாது.

ஆனால் அதற்கு முன் தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலையின் சிறிய பிரச்சினை உள்ளது. இன்று முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் கணிசமாக அதிகரிக்கும். நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில், மதியம் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
இந்த வெயிலின் போது 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் காற்றின் அளவை அதிகரிக்கக்கூடும். இந்த வாரம் திருவள்ளூர் / அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பால்காட் இடைவெளியைச் சுற்றியுள்ள இடங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு வெயிலை தாங்க வேண்டியிருக்கும், என்று சென்னை ரெயின் வானிலை அமைப்பு கூறியுள்ளது.
வெப்ப அலை: தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச போவதாக 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். மே 2ம் தேதிக்கு பின் வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு வானிலை: தமிழகத்தின் உள்பகுதிகளில் உள்ள பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வடக்கு உள் தமிழ்நாட்டின் பகுதிகளில் இயல்பை விட (சுமார் +4.5 டிகிரி செல்சியஸ்) அதிகமாக இருந்தன.
கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்பச் சலனம் நிலவுகிறது. அதிகபட்சமாக சேலத்தில் பதிவான வெப்பநிலை: 41.5°C (+3.9°C), அதைத் தொடர்ந்து திருப்பத்தூர்: 41.4°C (+4.2°C), கரூர் பரமத்தி: 41.0°C (+4.5°C), வேலூர்: 40.8°C ( +2.9°C), தருமபுரி: 40.7°C (+4.5°C), ஈரோடு: 40.7°C (+3.3°C) & திருச்சிராப்பள்ளி: 40.5°C (+3.1°C). திருத்தணி, நாமக்கல் பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ் பதிவானது. மதுரை (நகரம் & விமான நிலையம்), சென்னை (MBK), கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூரில் 39°C முதல் 40°C வரை பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் 34°C முதல் 37°C (இயல்புக்கு மேல் 2-3°C) மற்றும் மலைப் பகுதிகளில் 23°C முதல் 28°C வரை பதிவாகியுள்ளது (சில பகுதிகளில் சாதாரண அதிகபட்ச வெப்பநிலையை விட அதிகரித்துள்ள அளவு குறிப்பிடத்தக்கது. ) சென்னை (MBK) சாதாரண அதிகபட்ச வெப்பநிலையான 39.6°C (+4.3°C)க்கும் அதிகமாகவும், NBK சாதாரண வெப்பநிலை 36.7°C (+2.4°C)க்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் கரூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். 10ம் தேதி வரை இங்கே வெப்ப அலை வீசும்.
வெப்பம் உயரும்: அதேபோல் தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் உச்சமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் 37 - 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சராசரியாக தமிழ்நாடு முழுக்க நிலவும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
While large parts of #TamilNadu braces for #Heatwave conditions this week, the agony could finally end for many parts of Peninsular #India as #Summer #Thunderstorms are likely next week to bring not only relief from relentless heat but also #Rains. A detailed #WXwithCOMK post… pic.twitter.com/HWO1iG5v97
— Chennai Rains (COMK) (@ChennaiRains) April 30, 2024
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக தொடங்கி உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் டீசர்தான். ஏப்ரல் மாத இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications