தமிழகத்தில் ஜில்லுன்னு வரப்போகுது மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வெயிலுக்கு நடுவே இதமான அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
தமிழகத்தில் 10 நாட்களுக்கு மேலாக வெப்ப அலை வீசி வருகிறது. பகலில் வெளியில் சென்றால் மக்கள் மயங்கி விழுந்துவிடும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. இதனால் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதையே தவிர்க்கும் நிலை இருக்கும். மாலை 6 மணி வரையிலும் வெயிலின் தாக்கம் பல இடங்களில் இருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், 109 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் , "தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், ஒரு சில இடங்களில் மே 1-ந்தேதி (அதாவது நாளை) வரை அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக காணப்படும்.
மே 2 மற்றும் 3-ந்தேதிகளில், தமிழக வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில், 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை (102.2 முதல் 109.4 டிகிரி வரை) பதிவாகும். மேலும் வெப்ப அலையும் வீசும்.
அதேநேரம், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மே 1-ந்தேதி வரை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மே 2-ந்தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 3-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications