சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசு புயல் தெற்கு ஆந்திராவை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

Orange Alert

அதேபோல, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும்.

முன்னதாக இன்று மதியம் விடுக்கப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில்.. இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை (நவ.2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவ.3ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+