மது குடிக்காதீங்க.. காலை 11 மணி டூ மதியம் 3.30 மணி வரை வெளியே வராதீங்க.. சென்னை மக்களுக்கு வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் மே 4ம் தேதி வரை கடும் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் குடிப்பதை கைவிட வேண்டும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வீடுகளில் ஏசி, ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதற்கிடையே தான் வரும் மே மாதம் 3ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பஅலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மே 4ம் தேதி வரை கடும் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். அதேவேளையில் நாளை முதல் மே 3ம் தேதி வரை வடதமிழக உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம் அதிகமாக இருக்கும்.
இதன்மூலம் வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 39 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36.39 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 7 நாட்களுக்கு அதாவது மே 6ம் தேதி வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனாலும் கூட அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸாக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் சென்னை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு முக்கிய அட்வைஸை வழங்கி உள்ளது.
அதன்படி சென்னையில் வசிக்கும் மக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
வெயில் அதிகரிப்பதால் மதுபானம் அருந்த வேண்டாம். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். நீர்ச்சத்து நிறைய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் எளிதில் ஜீரணமாகும் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அட்வைஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications