இன்று இரவு மழை வெளுக்கும்.. சென்னை சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Weather

நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், அடையாறு, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மெரினா கடற்கரை, மயிலாப்பூர், நங்கநல்லூர், வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

15-10-2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+