"மஞ்சள் அலர்ட்.." பெங்களூரை புரட்டி போட்ட மழை! நள்ளிரவு வரை டிராபிக் பாதிப்பு! இன்று மழை தொடருமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில காலமாக அதீத வெப்பம் நிலவி வந்த நிலையில், இப்போது வானிலை மொத்தமாக மாறி நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்தது. சில மாதங்கள் மழை சுத்தமாகப் பெய்யாத நிலையில், கடுமையான நீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் நீர் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.

Rain continues in Bangalore amid yellow alert from Meteorological dept


இத்துடன் கோடைக் காலம் ஆரம்பித்ததும் அதீத வெப்பமும் பதிவாகத் தொடங்கியது. இரவு நேரங்களிலும் கூட அதிகப்படியான வெப்பம் தொடர்ந்தது. இதனால் பெங்களூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வானிலை:
ஆனால், இப்போது பெங்களூரில் வானிலை மொத்தமாக மாறியுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவுகிறது. நேற்று வியாழக்கிழமையும் பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்தது. கனமழையால் நகர் முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், இரவில் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. பல இடங்களில் டிராபிக் நெரிசல் நள்ளிரவு வரை நீடித்தது.

நகரின் மிக முக்கியமான சாலைகளிலும் நேற்றிரவு டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஏர்போர்ட் ரோடு, சாளுக்கிய சர்க்கிள் முதல் ஹெப்பல் மேம்பாலம் வரை, சுமனஹள்ளி சந்திப்பு, நாயண்டஹள்ளி சந்திப்பு, ஓஆர்ஆர் - ஹெப்பால், நாயண்டஹள்ளி என முக்கிய பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. போக்குவரத்து போலீசார் டிராபிக்கை சீர் செய்தனர்.

பேய்காற்று + ஆலங்கட்டி மழை.. பெங்களூரை குளிர வைத்த கோடை மழை.. ஹேப்பியான மக்கள்


ஏர்போர்ட்: குறிப்பாகப் பெங்களூர் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலை மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியதால், பயணிகள் ஏர்போர்ட் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பயணிகள் வேறு பாதையை ஏர்போர்ட் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கனமழையால் மோசமான வானிலை நிலவி நிலையில், பெங்களூர் ஏர்போர்ட்டில் தரையிறங்க முடியாத 14 விமானங்கள் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டன.. ஒரு பாதுகாப்பு விமானம் உட்பட மொத்தம் 14 விமானங்கள் சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கியது. பின்னர் பெங்களூரில் வானிலை சீரான நிலையில், அந்த 14 விமானங்களும் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றது.

இன்று மழை பெய்யுமா:
பெங்களூரில் வரும் நாட்களிலும் மழை தொடரும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. இன்றும் நாளையும் பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.. வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் மற்றும் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மே 12 ஆம் தேதி வரை மழை நீட்டிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்:
கனமழை தொடரும் என்பதால் அங்கு மஞ்சள் அவர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இப்படி வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் மக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் இந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு முன்பு கடைசியாக நவம்பர் மாதம் தான் மழை பெய்தது. அதன் பிறகு சுமார் 5 மாதங்களுக்கு மழையே இல்லை. வறண்ட ஒரு வானிலையே நிலவியது. இந்தச் சூழலில் தான் இப்போது பெய்து வரும் மழை பெங்களூர் மக்களுக்கு நிம்மதி தருவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+