வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் மழை.. அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை இருக்கு! ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கோடை வெப்பம் படுத்தி எடுத்து வருகிறது. அதேநேரம் சில இடங்களில் கோடை வெயிலைக் குளிர்விக்கும் வகையில் கொஞ்சம் மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதி முதலே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

மேலும், இப்போதே இந்தளவுக்கு வெப்பம் படுத்தி எடுக்கும் சூழலில், மே மாதம் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகிறார்கள். அதேநேரம் வெப்பத்திற்கு இடையே ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இது கோடை வெயிலுக்கு இதமாக அமைகிறது. மேலும், புழுக்கத்தையும் குறைக்கிறது.
8 மாவட்டங்களில் மழை
சென்னையில் கடந்த வாரம் ஓரிரு இடங்களில் மழை பெய்த நிலையில், அதன் பிறகு தலைநகரில் மழை இல்லை. ஆனால், மாநிலத்தின் இதர பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தே வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இரவு 7 மணி வரை விருதுநகர், மதுரை, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பம் எங்கே அதிகம்
மழை இருந்தாலும் கூட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்தே வருகிறது. நேற்றைய தினம் அதிகபட்சமாக கரூரில் 103.1°F வெப்பம் பதிவாகியிருந்தது. திருச்சியில் 102.38°F வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், மதுரையில் 102.38°F வெப்பமும், சேலத்தில் 102.2°F வெப்பமும் பதிவானது. அதேபோல ஈரோட்டில் 101.84°F வெப்பமும், வேலூரில் 101.48°F வெப்பமும் பதிவாகி இருந்தது.
சென்னை வெப்பம்
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வெப்பம் 98-99°Fஆகவே இருக்கிறது. சென்னையில் வெளியே போனாலே வியர்த்துக் கொட்டுகிறது.. பிறகு எப்படி இவ்வளவு குறைவான வெப்பம் பதிவாகும் என நீங்கள் கேட்கலாம். அதாவது வெப்பத்தைப் பொறுத்தவரை பதிவாகும் வெப்பம்.. நாம் உணரும் வெப்பம் என இரண்டு இருக்கிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பதிவாகும் வெப்பத்தை விட உணரும் வெப்பம் எப்போதுமே அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்தமிழகக் கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் புதுவை பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (22-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications