தென்மாவட்டங்களை மொத்தமாக நனைக்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்துடன் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது. இருப்பினும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில் இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 7 மணி வரை
கன்னியாகுமரி
நெல்லை
தென்காசி
தூத்துக்குடியில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்.2ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (31-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (01-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தொடங்கி பிப்.4ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications