தென் மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு! இந்திய வானிலை மையம் புதிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

South West Monsoon may start tomorrow says IMD

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல்வேறு இடங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் குறைந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

சென்னையெல்லாம் ஏசி இல்லாமல் கடந்த 3 நாட்களாக மக்கள் வாழத் தொடங்கிவிட்டனர். இந்த மழையே தென் மேற்கு பருவமழையின் தொடக்கம்தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை வரும் மே 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த முறை ஒரு நாளைக்கு முன்னதாக மே 31 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்ததது. இந்த பருவமழை இந்தியாவில் விவசாயத்திற்கு முக்கிய பங்கை வகிக்கிறது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த பருவமழை நிகழ்கிறது.

தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று ஜூன் மாதத்தில் கேரளாவுக்கு மழையாக வரும். இது செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இது முடிந்தவுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தென் மேற்கு பருவழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளையே தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது தெற்கு அந்தமான் பகுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனிடையே திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+