துபாய், பக்ரைன், தோஹா, ரியாத்தில் மீண்டும் வெளுக்க போகும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
சென்னை: துபாய், பக்ரைன், தோஹா, ரியாத் போன்ற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துபாய், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்க்காத பெருமழை கடந்த ஏப்ரல் 15, 16ம் தேதிகளில் பார்த்தார்கள். பாலைவனத்தில் புயல்களை பார்த்த அவர்கள், பெருமழை மற்றும் காட்டாற்று வெள்ளதை முதல் முறையாக கண்டனர். பெருமழை மற்றும் வெள்ளத்தால் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

துபாய் விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகே நிலைமை சீரானத.துபாயின் வடக்கு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் கடுமையாக இருந்ததால் காரில் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.. ஓமனில் பெய்த கனமழையால் சுமார் 19 பேர் பலியாகினார்கள்.
துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது மிகவும் வறண்ட பிரதேசம் ஆகும். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையே பெய்யும். ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்யும். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 16ம் தேதி ஒரே நாளில் 25 செமீ மழை பெய்தது. மோசமான காலநிலை மாற்றத்தால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கின. வாகனங்கள் பல மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட. சமூக ஊடகங்களில் துபாயின் வெள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீரென இப்படி மழை பெய்தற்கு அரேபிய தீபகற்பம் வழியாகச் சென்ற ஒரு பெரிய புயலே காரணம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் அப்போது கூறியது. அதேநேரம் செயற்கை மழை பெய்ய வைக்க நடந்த முயற்சி தான் விபரீதமாக மாறியது என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
இந்நிலையில் துபாய், பக்ரைன், தோஹா, ரியாத் போன்ற பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மே 2ம்தேதி துபாய், அபுதாபி, மற்றும் ஷார்ஜா பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், மே 1ம் தேதி பக்ரைனில் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார். இதேபோல் மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தோஹா மற்றும் ரியாதில் கனமழை பெய்யும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications