டோட்டல் சிட்டியே குளிர்ந்து போச்சு! சென்னையில் இன்று இரவும் மழை இருக்கு! வெதர்மேன் முக்கிய அப்டேட்
சென்னை: ஒட்டுமொத்த சென்னை சிட்டிக்கும் மழை பெய்துவிட்டது. இதைவிட நல்ல மழையை இன்று இரவு எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு சென்னையில் பரவலாக மழை பெய்தது.
இதுகுறித்து பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: கடல் காற்று காரணமாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை நல்ல பெய்தது. இது இடத்திற்கு இடம் மாறியது. என்ஜாய் செய்யுங்கள். இரவு நேரத்தில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.

நேற்றைய தினம் தென் சென்னையில் பகுதியில் நல்ல மழை பெய்யவில்லை. அதனால் இன்றைய தினம் நல்ல மழை பெய்தது. இரவு நேரத்திலும் தென் சென்னையில் நல்ல மழை பெய்யும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது போல் இன்னொரு போஸ்ட்டில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இது நல்லதொரு சீசன். வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும். காலை முதலே வெயில் இருந்தது. எனவே மழை பெய்ய சாதகமான நிலை உருவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், தருமபுரி, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருந்ததாவது: மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.
வரும் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 27 முதல் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27-ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications