ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
சென்னை: வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் ஏப்ரல் 16 ஆம் தேதியன்று வரை சற்று அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலை 11 மணி முதல் மாலை 3 வரையில் கடும் வெயில் நிலவி வருவதால், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என்றும், தண்ணீர் பாட்டில்கள், குடை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் ஏப்ரல் 16 ஆம் தேதியன்று வரை சற்று அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வடக்கு மத்திய பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை விதர்பா, மத்திய மகாராஷ்டிரம், மரத்வாடா, உள் கர்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் பெய்த மழை அளவு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், அடையாமடை, தென்காசி மாவட்டம், ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்
உள்தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) வரை சற்று அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூர் 102.74, ஈரோடு 102.2, மதுரை விமான நிலையம் 101.12, நாமக்கல் 100.76, திருச்சி 100.22, தருமபுரி 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications