இந்த 3 விஷயம்.. இதுதான் மேஜர்.. சென்னையை காப்பாற்ற இனி ஒரே வழி.. ஸ்டாலின் சாட்டையை சுழற்றணும்
சென்னை; சென்னையை எதிர்காலத்தில் மிக கடுமையான வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் இருந்து காப்பதற்கு அரசு முக்கியமான சில பணிகளை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
சென்னையில் 4000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகளில் தேங்கும் தண்ணீர்.. அப்படியே வடிகால் வழியாக கால்வாய்களில் கலந்து.. கடலுக்கு செல்லும். இதுவே வடிகால் அமைப்பு.

இதற்காக சென்னையையே கூறு போட்டு மாபெரும் வடிகால்களை அமைத்தனர். பொதுவாக சென்னையில் நேற்று முதல்நாள் பெய்தது போல எல்லாம் மழை பெய்து இருந்தால் சென்னை 4-5 நாட்களுக்கு மிதந்து இருக்கும். சென்னையே மொத்தமாக முடங்கி இருக்கும்.
சென்னை வெள்ளம்: ஏனென்றால் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.
இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.
என்ன நடந்தது?: இப்போதும் கூட சென்னையில் வெள்ளம் ஏற்பட முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நேற்று முதல்நாள் சென்னையை தாக்கியது. சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் புயல் நிலை கொண்டு இருந்தது. அங்கே இருந்தே புயல் மிக மிக மெதுவாக நகர்ந்தது.
2. இதன் காரணமாக சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கனமழை பெய்தது. 2015 ஐ விட மோசமான கனமழை சென்னையில் பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்ய மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
3. சென்னையில் பல பகுதிகளில் 47 செமீ மழை பெய்தது. சில இடங்களில் 60 செமீ மழை கூட பெய்தது. சென்னையின் பல பகுதிகள் இதனால் நீரில் மூழ்கின. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன
4. கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
என்ன செய்ய வேண்டும்: சென்னையை எதிர்காலத்தில் மிக கடுமையான வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் இருந்து காப்பதற்கு அரசு முக்கியமான சில பணிகளை செய்ய வேண்டிய கட்டம் உள்ளது.
1. சென்னையில் செய்யப்பட்டு உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து அகற்ற வேண்டும். வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் .
2. புதிய ஏரிகளை அமைக்க வேண்டும். பெரிய பெரிய குளங்களை அமைக்க வேண்டும். கடலில் மட்டும் நீர் கலக்கும் என்று நம்பி இருக்க கூடாது .
3. சென்னையின் புற நகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிகால் அமைப்புகளை, ஐடி காரிடார் பகுதிகளில் வடிகால் அமைப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும் .
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications