Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு மாவட்டங்கள் உஷார்.. 5 மாவட்டங்களில் பிச்சிக்கிட்டு கொட்டும் கனமழை! வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. மட்டுமல்லாது வரும் 8ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழைதான் முதலில் மழையை கொண்டு வரும். அதேபோல இந்த ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் மழை செழிப்பாக தொடங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழையின் அளவு போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஓரளவு இயல்பாக பெய்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்த மழை காலை வாரிவிட்டது. மழை குறைந்ததால் கேரளாவில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

There is a possibility of heavy rain in 5 districts of Tamil Nadu including Coimbatore and Dindigul

கர்நாடகாவின் நீர் பிடிப்புகளில் மழை குறைந்ததால், கிருஷ்ண சாகர் உள்ளிட்ட அணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனவே மேட்டூருக்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீரை நம்பி, டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நிலையில், கர்நாடகா போதுமான நீரை திறக்காதது பெரும் ஏமாற்றமளித்தது. இப்படியாக தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

அக்டோபரில் தொடங்கிய இந்த மழை, தாராளமாக பெய்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டின. இந்த காலத்தில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டி தெற்று ஆந்திராவில் கரையை கடந்தது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் நான்கு மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டன. மறுபுறம் தென் மாவட்டங்களிலும், டிச. 16 மற்றும் 17ம் தேதிகளில் பெய்த கனமழை வரலாறு காணாத வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

நாளை மறுநாளை பொறுத்த அளவில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-45 கி.மீ வேகத்திலும், இடையில் 55 கி.மீ வேகத்திலும் வீசும்.

6 மற்றும் 7ம் தேதியில், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40-55 கி.மீ வேகத்தில் வீசும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+