Kavali: வங்கக் கடலில் கொட்டும் "முரசு! கரையை கடக்க போகும் ஸ்பாட் எது தெரியுமா? வெதர்மேன் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் முரசு புயல் தெற்கு ஆந்திராவின் காவாலி அருகே தீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர பகுதியான காவாலிக்கு அருகே தீவிர புயலாக, முரசு புயல் வலுவடைந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cyclone Murasu

தற்போது நிலவும் வளிமண்டலம், கடல் சார்ந்த சூழல்கள் இந்த புயல் மேலும் வலுவடைய சாதகமாக அமைந்துள்ளன.

புயலை விரைந்து வலுவிழக்கச் செய்யும் 2 முக்கிய பிரச்சினைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

1. வலுவான காற்றின் திசையில் மாற்றம்

காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றங்களால் புயல் பலவீனமடையும். காற்றின் வேகம் மற்றும் திசையில் மாற்றமானது புயலின் செங்குத்து அமைப்பை சாய்த்து அதன் மேலே உள்ள மேகங்களைச் சுழற்சி மையத்தில் இருந்து விலகிச் செல்ல வைத்துவிடும். இது புயலின் சிஸ்டத்தையே சீர்குலைத்துவிடும். அதிலும் 30 நாட்ஸுக்கு மேல் இருக்கும் வலுவான காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றம், புயல் மேலும் வலுவடைவதை தடுக்கும்.

முரசு புயல் 10 நாட்ஸுக்கு குறைவாக இருக்கிறது. இது புயல் மேலும் வலுவடைவதற்கு மிகவும் சாதகமான சூழலாகும்.

2. வறண்ட காற்று

புயலுக்கு மத்தியில் வறண்ட காற்று ஊடுருவும் போது மேகங்களை திரள்வதை தடுத்து புயலை தொடர்ந்து இயக்கும் ஈரப்பதத்தை குறைத்துவிடும். முரசு புயலை சுற்றி ஒரு வறண்ட காற்று ஊடுருவ முயறசிக்கிறது. எனினும் தற்போதைக்கு தனது மையத்தை பாதுகாப்பாக தக்க வைத்திருக்கிறது.

புயல் நகரும் பாதை

புயல் நகரும் பாதையில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த வெதுவெதுப்பான கடல்நீர் புயலுக்குத் தேவையான வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் வழங்கி அது தீவிரமடையத் தொடர்ந்து உதவுகிறது.

சாதகமான சூழல்

இந்த சாதகமான சூழல்களால் முரசு புயல் கரையைக் கடக்கும் வரை வலிமையாக இருந்து இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது போலம் அமெரிக்க வானிலை மையம் மணிக்கு 105 கி.மீ.ஆக இருக்கும் என கணித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை காலை முதலே மழை பெய்ய தொடங்கும். இருந்தாலும் பலத்த மழை பொழிவு கடலிலேயே நகர்ந்து விடுகிறது. இதனால் நிலப்பகுதிக்கு அந்த அளவுக்கு மழை இருக்காது.

வடசென்னை கடலோர பகுதிகளில் நல்ல மழை மேகக் கூட்டங்கள் இருந்தால் கனமழை பெய்யும். பொன்னேரி- கும்மிடிப்பூண்டி- பழவேற்காடு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

முரசு புயல்

இதுகுறித்து அவர் இன்னொரு பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி முரசு புயல் நெருங்கும் நிலையில் அதன் வெளிப்பகுதி மழை மேகக் கூட்டங்கள் நாளை அதிகாலை முதல் இரு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் நீடிக்கும். வெயிலின் தாக்கம் குறையும்.

குளிர்ந்த மழை

புயல் நம்மை நெருங்கிச் சென்றாலும் கரையை தொடாமல் விலகிச் செல்லும் போதெல்லாம் ஏற்படும் குளிர்ந்த, மழை தற்போதும் நிலவத் தொடங்கும். பெரும்பாலான அடர்ந்த மேகக் கூட்டங்கள் கடலில் நிலைக் கொண்டிருப்பதால் மழையானது தெற்கு- மத்திய ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். இதனால் சென்னை நாளை முதல் இரு நாட்களுக்கு மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+