Murasu: ஜஸ்ட் மிஸ்! சென்னைக்கு அருகே சென்றும் "கொட்டாத" முரசு! எங்கு மழைக்கு வாய்ப்பு? வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் இன்றைய தினம் முரசு புயல் உருவாகும் நிலையில் சென்னையை நோக்கி வரும் மழை மேகங்கள் எவ்வளவு அருகில் வரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி முரசு புயல் நெருங்கும் நிலையில் அதன் வெளிப்பகுதி மழை மேகக் கூட்டங்கள் நாளை அதிகாலை முதல் இரு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் நீடிக்கும். வெயிலின் தாக்கம் குறையும்.

புயல் நம்மை நெருங்கிச் சென்றாலும் கரையை தொடாமல் விலகிச் செல்லும் போதெல்லாம் ஏற்படும் குளிர்ந்த, மழை தற்போதும் நிலவத் தொடங்கும். பெரும்பாலான அடர்ந்த மேகக் கூட்டங்கள் கடலில் நிலைக் கொண்டிருப்பதால் மழையானது தெற்கு- மத்திய ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும்.

Weatherman

வடக்கு திசை

இருந்தாலும் இந்த சிஸ்டம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை மேகங்களை ஈர்க்கும் அளவுக்கு அருகில் வந்து செல்லும். எனவே புயலால் ஏற்படும் மிகக் கனமழையை சென்னை ஒரு வேளை தவறவிட்டாலும், புயல் கடந்து செல்லும் போது சென்னை நகரின் மீது மிதமான மேகக் கூட்டங்கள் நகர்ந்து வந்து மிதமான மழையை தரும். எனவே சென்னைக்கு கனமழையோ அல்லது மிக கனமழையோ கிடையாது.

தமிழகத்திற்கு எப்படி மழை?

இந்த முரசு புயலால் மழை, எங்கெங்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

தெற்கு- மத்திய ஆந்திரா- கனமழை முதல் மிகக் கனமழைக்கான முக்கிய பகுதி.

வடதமிழகத்தில் மழை

வடதமிழகம்- காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் வடக்கே நகரும் போது வெளிப்புற மேகங்கள் மூலம் மிதமான மழை பெய்யும்.

சென்னை நிலவரம்

சென்னை- சென்னையில் மிதமான மழைக்கே வாய்ப்பு, கனமழை பெய்வதற்கான மேகக் கூட்டங்கள் சென்னையை விட்டு விலகியே இருக்கும். எனவே வடசென்னை கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ரூட் சேஞ்சானால் சென்னைக்கு லாபம்

வடதமிழகம்- பொன்னேரி- கும்மிடிப்பூண்டி- பழவேற்காடு உள்ளிட்ட வடதமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம். புயலின் பாதை சிறிய அளவுக்கு திசை திரும்பினால் கூட சென்னைக்கு உதவியாக இருக்கும். வரவிருக்கும் இரு நாட்களில் சென்னையின் சில பகுதிகளில் குறைந்தபட்சம் 4 முதல் 7 செ.மீ. மழையாவது பெய்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வானிலை மையம்

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும். இந்த வானிலை அமைப்பு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதன் வெளிப்புற மழை மேகங்களின் தாக்கத்தால் வடதமிழகக் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 960 கி.மீ. தொலைவில் இந்த புயல் சின்னம் இருக்கிறது.

நவம்பர் 4ஆம் தேதியும் மழை

நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் நவம்பர் 4ஆம் தேதியும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+