விஜய் படத்தை காலி பண்ண தான் இதெல்லாம்! சிவகார்த்திகேயன் சொன்னது பொய்! பிஸ்மி ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் பேசப்பட்டு வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் அரசியல் பின்னணியில் உருவாகும் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

அடுத்த நாள் ரிலீஸ்
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம், ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் படம் வெளியாகும் மறுநாளே மற்றொரு பெரிய நடிகரின் படம் வருவது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, ரசிகர்களிடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, விஜய் ரசிகர்கள் மத்தியில் இது கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் விளக்கம்
'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த ரிலீஸ் தேதி சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார். "ஜனவரி 10ஆம் தேதி என்பது தயாரிப்பாளர் எடுத்த முடிவு. இதை விஜய் சாரிடமே தெரிவித்தோம்.
அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார். வாழ்த்தும் தெரிவித்தார். இது அண்ணன் - தம்பி பொங்கல்" என அவர் கூறினார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
சிவகார்த்திகேயன் பேச்சை மறுத்த பிஸ்மி
இந்த விவகாரம் தொடர்பாக, பிரபல சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "சிவகார்த்திகேயன் இசை வெளியீட்டு விழாவில் சொன்னது எல்லாமே பொய்.
கேமரா இல்லாமலும் அவர் நன்றாகவே நடிக்கிறார்" என்று ஆரம்பித்த பிஸ்மி, விஜயின் மனநிலையைப் பற்றி தெளிவாக பேசினார். "ஒருவேளை சிவகார்த்திகேயன் விஜய்யிடம் பேசினாலும், விஜய் அவரிடம் 'உங்கள் படத்தை தள்ளி வையுங்கள், உங்களால் என் படத்தின் வசூல் பாதிக்கும்' என்று சொல்வாரா?
சிவகார்த்திகேயன் படம் வந்தால் தன்னுடைய படத்தின் வசூல் பாதிக்கும் என்று விஜய் ஒருபோதும் நினைக்க மாட்டார்" என பிஸ்மி கூறினார். வசூல் விஷயத்திலும் பிஸ்மி கேள்விகளை எழுப்பினார். "9ம் தேதி ஜனநாயகன் பாருங்கள், 10ம் தேதி என் படத்துக்கு வாருங்கள் என்கிறார்.
ஒரு பெரிய படம் ஒரே நாளில் முழு வசூலை எடுத்து விடுமா? குறைந்தபட்சம் 5 நாட்கள் எந்த போட்டியும் இல்லாமல் இருந்தால்தான் ஒரு படம் தனது முழு வசூலை எடுக்க முடியும். இது சிவகார்த்திகேயனுக்கு தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
வேண்டுமென்றே போட்டி
மேலும், "ஜனநாயகன் படத்தின் வசூலை குறைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் பராசக்தியை 10ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்" என பிஸ்மி குற்றம்சாட்டினார். ஒரு ஹீரோ நினைத்தால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியும்.
இது விஜய் சாரின் கடைசி படம், அவரின் படம் நல்ல வசூலை பெறட்டும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தால், தயாரிப்பாளர் கண்டிப்பாக சம்மதித்திருப்பார் என்றும் அவர் கூறினார்.
பிஸ்மி தனது விமர்சனத்தில் மேலும் கூறியதாவது: "இதுவரை விஜய்க்கு அடுத்தது நான்தான் என்ற மனநிலையில் இருந்த சிவகார்த்திகேயன், இப்போது விஜய்யுடனே போட்டி போடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
ஒருவேளை ஜனநாயகன் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றால், 'விஜய் படத்தையே நான் காலி செய்துவிட்டேன்' என்று மார்தட்டிக் கொள்வார்" என்றார்.
ட்ரெய்லர் வியூஸிலும் சந்தேகம்
ட்ரெய்லர் வியூஸ் தொடர்பாகவும் பிஸ்மி சந்தேகம் எழுப்பினார். "ஜனநாயகன் ட்ரெய்லர் இரண்டு நாட்களில் சுமார் 3.9 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பராசக்தி ஒரே நாளில் 4 கோடியை தாண்டியது எப்படி? வேண்டுமென்றே பணம் கொடுத்து வியூஸை உயர்த்தியிருக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
யூடியூப் சேனல்கள் குறித்த குற்றச்சாட்டு
இதோடு நிற்காமல், "என்னை திட்டுவதற்கே பல யூடியூப் சேனல்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.நிறைய பேர் பார்க்கும் சேனல்களை தேர்ந்தெடுத்து, ஜனநாயகன் படத்தை மட்டம் தட்டவும், பராசக்தியை தூக்கிப் பேசவும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் வெளியில் நல்லவராக நடித்துக் கொண்டிருக்கிறார்" என்று பிஸ்மி கடுமையாக தாக்கினார்.
ரிலீஸ் தேதி சர்ச்சை ஒருபுறம் விஜய்யின் ஜனநாயகன் படம் அரசியல் பின்னணியால் கவனம் பெற, மறுபுறம் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ரிலீஸ் தேதி சர்ச்சையால் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த விவகாரம் மேலும் தீவிரமாகுமா, அல்லது இரண்டு படங்களும் தனித்தனியாக வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications