பராசக்தி ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனின் "தற்குறி” டயலாக், இயல்பாக வந்ததா? அல்லது உள்நோக்கமா?
சென்னை: இந்த பொங்கல் சீசனில் தமிழ் சினிமாவின் கவனம் முழுவதும் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் மீதே திரும்பியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு ட்ரைலர்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளன. எந்த ட்ரைலர் அதிக வரவேற்பை பெற்றது? யூடியூபில் எந்த படம் முன்னிலை வகிக்கிறது? அதே நேரத்தில் பராசக்தி ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் புதிய சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

பொங்கல் மோதல்
விஜய்யின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான பராசக்தி ஆகிய இரண்டும் ஒரே பொங்கல் வாரத்தில் வெளியாக இருப்பதால், ஆரம்பத்திலிருந்தே இந்த மோதல் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக, விஜய்யின் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் மோதுவது குறித்து சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பராசக்தி ஆடியோ லான்ச்சில் சிவகார்த்திகேயன் பேசியதும் பெரும் கவனம் பெற்றது.
ஜனநாயகன் ட்ரைலர்
முதலில் வெளியான ஜனநாயகன் ட்ரைலரை பார்த்த ரசிகர்களுக்கு, இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், அதே நேரத்தில் அரசியல், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஹெச்.வினோத் டச் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டிருப்பதால், இரண்டு படங்களுக்கும் கணிசமான வித்தியாசம் இருக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் லுக், அரசியல் வசனங்கள், மேக்கிங் ஸ்டைல் ஆகியவை ட்ரைலரின் முக்கிய ஹைலைட்டுகளாக அமைந்துள்ளன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்த ட்ரைலரை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். ட்ரைலரில் இடம்பெற்ற பல வசனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பராசக்தி ட்ரைலர்
மறுபக்கம், பராசக்தி ட்ரைலர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், அதர்வா, வில்லனாக ரவி மோகன், தமிழில் முதல் முறையாக ஸ்ரீலீலா ஆகிய கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ட்ரைலரிலேயே, ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டமே படத்தின் மையக் கதைக்களம் என்பதை இயக்குநர் சுதா கொங்கரா தெளிவாக சொல்லிவிட்டார். இதனால் எந்த குழப்பமும் இல்லாமல் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பராசக்தி ட்ரைலருக்கு பெரிதாக நெகட்டிவ் விமர்சனங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூடியூப் பார்வையாளர்கள்
ட்ரைலர் ரியாக்ஷன்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் சரி சமமான வரவேற்பை பெறுவதாக தெரிகிறது. ஆனால், யூடியூப் பார்வையாளர் எண்ணிக்கையில் ஜனநாயகன் ட்ரைலர் தான் முன்னிலையில் உள்ளது. பராசக்தியை விட பல மில்லியன் பார்வைகளை அதிகமாக பெற்று, ஜனநாயகன் ட்ரைலர் சாதனை படைத்து வருவதாக படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்குறி வசனம்
இதற்கிடையே, பராசக்தி ட்ரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் தற்போது தனியாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. "எட்டாவது படித்த என்னை, படிக்காத தற்குறி ஆக்கிவிட்டார்கள்" என்ற சிவகார்த்திகேயனின் வசனம், இயல்பான கதைசூழலுக்கானதா அல்லது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
சில ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள், "தற்குறி" என்ற வார்த்தை, பொதுவாக விஜய் ரசிகர்களை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்லாக இருக்கிறது. அப்படி இருக்க, இந்த வார்த்தையை பராசக்தி ட்ரைலரில் பயன்படுத்தியது, மறைமுகமாக ஜனநாயகன் அல்லது விஜய் ரசிகர்களை குறிவைத்து வைக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
மற்றொரு தரப்பினர், இது முழுக்க முழுக்க கதாபாத்திரத்தின் சூழ்நிலைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வார்த்தை, இதில் எந்த அரசியல் அல்லது ரசிகர் மோதல் நோக்கமும் இல்லை என வாதிடுகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
சிவகார்த்திகேயன் ரசிகர்கள், "ஒரு சமூக போராட்டக் கதையில் வரும் வசனத்தை ரசிகர் மோதலாக மாற்றுவது தேவையற்றது" என்கிறார்கள். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் சிலர், "இப்படி ஒரு வார்த்தையை இப்போது பயன்படுத்துவது திட்டமிட்டது போல இருக்கிறது" என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த தற்குறி என்ற டயலாக் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications