Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate: தங்கம் விலை இனி 5 digit-களில் வரவே வராதா? டிரம்ப்பால் நகைப் பிரியர்கள் அவதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஜனவரி 5-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,02,640 -க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 5
ரூபாய் ஒரு கிராம் ரூ 271-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,71,000-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் காலையும் மாலையும் என சவரனுக்கு ரூ 1280 என உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

Gold Rate Gold Price

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.

ஜனவரி 6-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,02,640 -க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 271-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,71,000-க்கும் விற்பனையானது.

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்துள்ளதால் தங்கம், வெள்ளி
விலையுடன் கச்சா எண்ணெயின் விலையும் உயரக் கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மார்க்கெட் திறந்த முதல் நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1280 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+