Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

HCL -லில் வேலை ரெடி.. நாளை காலை 10 மணிக்கு இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (ஜனவரி 17) காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Chat Support Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Chat Support Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.

hcl-walk-in-interview-for-chat-support-associate-roles-in-hyderabad-on-january-17

அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் கட்டாயமாக டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை இண்டர்நநேஷனல் சாட் (லைவ்) புராசஸில் அனுபவம் இருக்க வேண்டும்.

மேலும் கஸ்டமர்களின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதிலளிக்க தெரிந்தருக்க வேண்டும். சரியான தகவல்களை வழங்குவது மற்றும் கஸ்டமர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். ஒரே நேரத்தில் மல்டிபிள் சாட் கன்வர்சேஷனுக்கு தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு ரோட்டேஷனல் ஷிப்ட் உள்ளது. இதனால் அதற்கு தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. இதனை ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (ஜனவரி 17) காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech Office, H01B, Phoneix Avance Business Hub, Hitech City, Hyderabad என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம், அரசு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். லேப்டாப் மற்றும் பென்டிரைவ் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+