Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT JOBS: அரியர்ஸ் இருந்தாலும் சென்னையில் வேலை.. நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ.. அழைக்கும் HCL

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்போர் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ ஜனவரி 8 (நாளை), ஜனவரி 9 (நாளை மறுநாள்) மற்றும் ஜனவரி 10 என 3 நாட்கள் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshers-களுக்கான பணியாகும். இதனால் அனுபவம் எதுவும் தேவையில்லை.

ஒருவேளை அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு ஓராண்டு வரையிலான எக்ஸ்பிரியன்ஸ் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

it-jobs-hcl-mega-walk-in-interview-for-fresher-voice-process-and-interview-from-january-8-to-10-in

இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி அவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

அரியர்ஸ் இருந்தாலும் கவலையின்றி இண்டர்வியூவில் பங்கேற்கலாம். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு ரெடியாக இருக்க வேண்டும்.

எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு Cab வசதி உள்ளது. இன்டர்நேரஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 8 (நாளை), ஜனவரி 9 (நாளை மறுநாள்), ஜனவரி 10 என 3 நாட்கள் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில்பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic ne,, Sholinganallur, Medavakkam High Road, Sholinganallur - 600 119, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இண்டர்வியூ நடக்கும். தேர்வாகும் நபர்கள் அதே அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு லேப்டாப் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+