IT JOBS: Fresher வேலைவாய்ப்பு.. எச்சிஎல் நிறுவனத்தில் ஜனவரி 12 -13ல் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஜனவரி 12 (நாளை) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 13) ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Customer Service Representative - International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இது Freshersக்கான பணியாகும். இதனால் பணி அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கான தகுதி குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருந்தாலே இண்டர்வியூவில் பங்கேற்கலாம். டிகிரி முடித்தவர்கள், எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் என்றால் கடைசி செமஸ்டர் ரிசல்ட் மார்க்சீட் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமு்.
இன்ஜினியரிங், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 30 கிலோமீட்டர் தூரம் வரை Cab வசதி உள்ளது. இது பெண் ஊழியர்களுக்கு இலவசமாகும். மேலும் பணியாளர்களுக்கு இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். பணி என்பது US Shift முறையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
இதற்கான இண்டர்வியூ ஜனவரி 12, ஜனவரி 13 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech ETA 3, Sandhya infocity, OMR, Rajive Gandhi Salai, Near AGS cinemas, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் அதே நாவலூர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications