சென்னை - பெங்களூர் - ஹைதராபாத்தில் காலியிடங்கள்.. டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். டிசிஎஸ் என அழைக்கப்படும் இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அதன்படி தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதி வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்கு ஜாவா ஃபுல் ஸ்டாக், ஸ்ரிங்புட், மைக்ரோசர்வீசஸ், ரியாக்ட் ஜேஎஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஜாவா ஸ்பிரிங்புட் டெக்னாலஜிஸில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மேலும் ஆங்குலர் அல்லது பிற ஜாவா யூஐ டெக்னலாஜிஸில் அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் மைக்ரோசர்வீசஸில் அனுபவம் இருக்க வேண்டும். கோர் ஜாவா (Core Java), ஆரக்கள் (Oracle) உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் பேக்எண்ட், ஃப்ரண்ட் எண்ட் டெக்னலாஜி சார்ந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 8 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்டும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசிதேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழகத்தில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையில் பணியாற்ற கூட வாய்ப்பு கிடைக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications