இந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கு.. எதிர்காலத்தில் பிரச்சனையே வராது
சென்னை: இந்தக் காலத்தில் வேலைக்கான போட்டி பல மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, நாம் எந்தத் துறையில் படிப்பை மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்கிடையே வரும் காலங்களில் எந்தத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது வேலைவாய்ப்புத் துறை மிக வேகமாக மாறி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக வேலைகளைக் கொடுத்து வந்த நிறுவனங்களும் கூட இப்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் எந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் இருக்கிறதோ அதற்கேற்ப இளம் தலைமுறையினரை ரெடி செய்வது அவசியமாகிறது.

எந்தத் துறைகள்
அப்படி அடுத்து வரும் ஆண்டுகளில் எந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்! இந்தத் துறைகளுக்கான தேவை தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், இப்போதே அதற்கேற்பத் தயாராகி இருந்தால் உங்கள் கனவு வேலையை ஈஸியாக அடையலாம்.
ஏஐ
இதில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமே இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தான்.. ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் துறைகளில் வேலைவாய்ப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தத் துறைகளில் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 35% வரை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI இன்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட் மற்றும் மெஷின் லேர்னிங் டெவலப்பர் போன்ற வேலைகளுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள். மேலும், இது அதிகச் சம்பளம் தரும் வேலையாகவும் இருக்கும்.. இந்தியாவில் இந்தத் துறையில் ஆரம்பத்திலேயே ₹10-15 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் செக்யூரிட்டி
அடுத்து சைபர் செக்யூரிட்டி.. இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் டிஜிட்டல் சாதனங்களின் யூஸ் அதிகரித்துள்ளது. இதனால் சைபர் தாக்குதல்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்களுக்கான தேவை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி, ஹெல்த்கேர் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் டேட்டாவை பாதுகாக்கப் பல கோடி ரூபாயை முதலீடு செய்கின்றன. இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் சம்பளம் ரூ.20 லட்சம் வரை இருக்கிறது.
டேட்டா அனலிட்டிக்ஸ்
அதேபோல டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் டேட்டா என்பது ஒவ்வொரு நிறுவனத்தின் மிகச் சக்திவாய்ந்த சொத்தாக உள்ளது. டேட்டாவை திறம்படப் புரிந்துகொண்டு, அதைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய டேட்டா அனலிஸ்ட் மற்றும் கிளவுட் இன்ஜினியர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமேசான், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களிலேயே இந்தத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
இதர துறைகள்
அடுத்து Renewable எனர்ஜி எனப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த வேலைகள். புவிவெப்பமயமாதல் எந்தளவுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இப்போது மாறியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, குறைந்தளவு மாசை ஏற்படுத்தும் நிலையான எனர்ஜியை நோக்கி சர்வதேச நிறுவனங்கள் மெல்ல நகர்கின்றன. இந்த எனர்ஜி துறைகளில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் பசுமை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் அரசுகளும் கூட இந்தத் துறைகளில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் பயோடெக் துறையிலும் கூட கொரோனா காலத்திற்குப் பிறகு வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் கூட ஹெல்த் டேட்டா அனலிஸ்ட், மெடிக்கல் கோடர்கள், பயோடெக்னாலஜிஸ்டுகள் மற்றும் பார்மா ஆராய்ச்சியாளர்கள் போன்ற பிரிவுகளிலேயே வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications