Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்க்குடிமகன் மாரடைப்பில் மரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Tamilkudimaganமுன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் மாரடைப்பால் காலமானார்.

இவர் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் நடந்த அதிமுக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அப்போது,அவருக்கு லேசான மயக்கத்துடன் நெஞ்சு வலி ஏற்பட்டது. மதுரை வந்த அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டதால் மதுரை ஆவின்அருகிலுள்ள சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மேலும் மோசமானதால் பின்புமதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்க்குடிமகன்ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

பின்னர் தமிழ்க்குடிமகனின் உடல் மதுரை புதூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள், கட்சிபிரமுகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

ஜெ. இரங்கல் :

தமிழ்க்குடிமகன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறந்த தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான தமிழ்க்குடிமகன் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம்அடைகிறேன். கல்லூரி முதல்வராய், தமிழக அமைச்சராய், சட்டசபை சபாநாயகராக –அவர் தமிழ் இனத்துக்குப் பெருந்தொண்டுஆற்றினார். அவருடைய மறைவு அதிமுகவுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு:

தமிழ்க்குடிமகனின் சொந்த ஊர் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர். இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு வெற்றிச் செல்வி(59) என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.

1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார். 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் இளையான்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அப்போதைய ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார்.

1996 முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+