"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்!
சென்னை: மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகெங்கும் மக்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் இதனால் மக்கள் ஒரேயடியாக அதிகப்படியான பெட்ரோல்- டீசலை வாங்கி குவிக்கும் சூழலில் இதனால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த செயற்கை தட்டுப்பாடு காரணமாகச் சென்னை உட்பட மாநிலத்தில் சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் காரணமாகச் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும் சூழலில், பெட்ரோல்- டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மக்கள் காத்திருப்பு
இதற்கிடையே சென்னையில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் புதன்கிழமை இரவு முழுவதும் பரவின. இதனால் நேற்றைய தினம் நகரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பீதியடைந்த வாகன ஓட்டிகள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருள் நிரப்பினர். புதன்கிழமை காலை முதலே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் பெட்ரோல் நிலையங்களில் காத்திருந்தனர்.
இது தொடர்பாகச் சென்னை மக்கள் கூறுகையில், "கிட்டத்தட்ட எல்லா பெட்ரோல் பங்குகளிலும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. வழக்கமாக பெட்ரோல் பிடிக்க இரண்டு நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால், இப்போது 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. இது என் நேரத்தை வீணாக்குகிறது. இதனால் நான் ஆபீசுக்கும் தாமதமாகவே செல்ல வேண்டி இருக்கிறது" என்றார்.
இரண்டு மடங்கு அதிகரித்த விற்பனை
தற்போது வரை தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால், அச்சம் காரணமாக மக்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப மக்கள் குவிகிறார்கள். இதனால் வேளச்சேரியில் பெட்ரோல்- டீசல் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தாக பாரத் பெட்ரோலியம் நிலைய மேலாளர் ஒருவர் தெரிவித்தார். வழக்கமாகத் தினசரி 13,000 முதல் 16,000 லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், இப்போது அது 26,000 லிட்டராக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். டீசல் விற்பனையும் 7,000 லிட்டரில் இருந்து 13,000 லிட்டராக கணிசமாக அதிகரித்துள்ளது.
மூடல்
இந்த அதிகப்படியான டிமாண்ட் காரணமாகச் சென்னையில் சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு காரணமாக இது மூடப்படவில்லை. மாறாகச் செயற்கையாக மக்களிடையே எழுந்த பீதி தான் இதற்குக் காரணம். அதாவது எங்கு வரும் நாட்களில் பெட்ரோல்- டீசல் கிடைக்காதோ என நினைத்து மக்கள் அதிகப்படியான எரிபொருளை வாங்குகிறார்கள். இதுவே பற்றாக்குறைக்குக் காரணம் என்கிறார்கள்.
நேற்று பிற்பகலில் கூட வேளச்சேரியில் இதுபோலத் தான் ஒரு பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. அதற்கும் இந்த அச்சமே காரணம். அதாவது அங்கு எப்போதும் மக்கள் மாலை நேரத்தில் தான் பெட்ரோல்- டீசலை அதிகம் போடுவார்களாம். இதனால் இரவில் எரிபொருளை நிரப்புவார்கள். ஆனால், நேற்றைய தினம் காலை முதலே அதிகப்படியான மக்கள் பெட்ரோல்- டீசலை நிரப்பியதால் பிற்பகலிலேயே கையிருப்பு காலியாகிவிட்டது. இதனால் அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.
விதிமீறல்கள்
இந்த அச்சம் காரணமாக பலரும் இதுபோல முண்டியடிக்கும் சூழலில், சென்னையைத் தாண்டியும் பல இடங்களில் இதுபோல செயற்கை தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், கோவை, மதுரை நகரங்களிலும் மக்கள் 45 நிமிடங்களுக்கும் மேலாக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக் காத்திருந்தனர். மேலும், விதிகளை மீறி சிலர் கண்டெய்னர்களிலும் பெட்ரோல் டீசலை நிரப்பி வருகிறார்கள்.
-
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்!












Click it and Unblock the Notifications